தேர்தல் பரபரப்புகள் நமது மாநிலத்தில் ஓய்ந்தன. அரசுக்கோ, காவல் துறையினருக்கோ எந்த விதமான பதற்றத்தையும் அளிக்காமல் மக்கள் அமைதியாக வாக்களித்துவிட்டுச் சென்றார்கள். பதற்றமான பகுதிகள் என்று தேர்தல் ஆணையமே சுட்டிக்காட்டிய இடங்களில்கூட எந்த அசம்பாவிதமும் இல்லை. இது ஒரு நல்ல விஷயம். நிச்சயமாகப் பாராட்டுக்குரியது.
ஆனால் இந்தத் தேர்தலில் கவலை தரும் வேறோர் அம்சம் இருந்ததை கவனிக்கலாம். இம்முறை சமூக வலைத்தளங்களில் நடந்த தேர்தல் விவாதங்களை, அதில் மக்கள் ஆர்வமுடன் சொன்ன கருத்துகளை, வெளியிட்ட மீம்களை, விடியோக்களை இன்னபிறவற்றை வைத்து, இந்த முறை நிச்சயம் தொண்ணூறுக்கும் மேற்பட்ட சதவீதத்தினர் வாக்களிப்பார்கள் என்று நினைக்கத் தோன்றியது. ஆனால் வாக்களித்தவர்களின் சதவீதம், எழுபத்தைந்துக்கும் குறைவு.
தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுடன் ஒப்பிட்டால் சென்னை மிகவும் மோசம். சென்னையில் வேலை வாங்கி, வீடு வாங்கி, வாக்காளர் அடையாள அட்டையும் வாங்கிவிடுகிறார்கள். ஆனால், வாக்களிக்களிக்கும் நாளில் மூட்டை கட்டிக்கொண்டு குடும்பத்தோடு கோடைக் கொண்டாட்டங்களுக்குப் போய்விடுகிறார்கள். இங்கேயே இருந்தாலும் வெயிலைக் காரணம் சொல்லிப் பலபேர் வாக்களிக்கவில்லை என்பது அவரவரே வெளியிட்ட ஃபேஸ்புக் ஸ்டேடஸ்களில் தெரிந்தது. வெயில் நிவாரண நிதி ஐயாயிரம் உண்டு என்றால் அடித்துப் பிடித்துக்கொண்டு ஓடிச் சென்று வரிசையில் நிற்காமல் இருப்பார்களா? விடுங்கள். வெயிலைக் காரணம் சொல்லி தினமும் அலுவலகம் போகாமல்தான் இருக்கிறார்களா?
சரியான தலைப்பு