Home » எங்கே போகிறோம்?
நம் குரல்

எங்கே போகிறோம்?

உக்கிரமாக அரசியல் பேசுகிறோம். தீவிரமாக சமூகப் பிரச்னைகளைப் பேசுகிறோம். சாதி, மதம், சநாதனம் அது இதுவென்று ஒவ்வொரு நாளும் விவாதம் செய்ய விதவிதமாக நமக்குப் பேசுபொருள் கிடைத்துவிடுகிறது. எண்ணிப் பார்த்தால், மாபெரும் இடிபாடுகளையும் சிதிலங்களையும் மோசமான கட்டுமானத்தையும் நமது சந்ததிக்கு வழங்கிவிட்டு, அத்தோல்வியை உணர்ந்தும் வெளிப்படுத்த விரும்பாமல் தப்பிக்கும் விதமாகவே இப்படியெல்லாம் பொது வெளியில் உலகப் பிரச்னைகளைப் பேசிக்கொண்டிருக்கிறோமோ என்று தோன்றுகிறது.

நேற்றெல்லாம் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் பதினாறு வயது மகள் தற்கொலை செய்துகொண்டது குறித்த செய்திகளால் நிறைந்திருந்தது சமூக ஊடக வெளி. அதிர்ச்சி வெளிப்பாடுகள். அனுதாபச் செய்திகள். இரங்கல் குறிப்புகள். ஆலோசனைகள். மன அழுத்தம் பற்றிய அவரவர் கருத்துகள். தவிர, சம்பந்தப்பட்ட பிரபலத்தின் வீட்டில் இருந்து நேரடி ஒளிபரப்பு.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!