Home » அபிராமியின் டிஜிட்டல் விஜயம்
விழா

அபிராமியின் டிஜிட்டல் விஜயம்

திங்கள்கிழமை வெள்ளை, செவ்வாய் சிகப்பு, புதன் நீலம் என ஓர் அட்டவணையை அனுப்பியிருந்தனர். நவராத்திரி நெருங்கிவிட்டது என்பதன் குறியீடு அது. மைசூர், டஸ்ஸர், போச்சம்பள்ளி பட்டுப் புடவைகள், மேட்சிங் நெக் செட், தோடு, வளையல், கைப்பை என அப்பார்ட்மெண்ட் பெண்மணிகளின் பளபள அணிவகுப்பு கண்முன் விரிந்தது.

கிளம்பும் நேரத்தில் மேனேஜர் சொன்ன வேலையை எரிச்சலுடன் முடித்து, பத்து நிமிடத் தாமதத்தால் மெட்ரோவில் அரை மணி நின்றுகொண்டே வந்து, ஷேர் ஆட்டோவில் இடுங்கி அமர்ந்து, ஈரத்தில் விழுந்த ஈசல் பூச்சிபோல அப்பார்ட்மெண்டுக்குள் நுழைவோம். அங்கே பெண்கள் பளபளவென அலங்காரம் செய்து பட்டாம்பூச்சிகள் போலச் சுற்றிக்கொண்டிருப்பார்கள்.

எல்லாம் ஒரே வண்ணப் பட்டாம்பூச்சிகள். வாட்ஸப்பில் நிறப்பட்டியலை அனுப்பியது அப்பார்ட்மெண்ட் செக்ரட்டரிதான் என்றாலும், அது முப்பெரும் தேவியர் தயாரித்து அனுப்பியதாகவே கருதப்படும். அன்றைய நிறம் பச்சை என்றால் இலைப் பச்சை, இளம்பச்சை, கரும்பச்சை, பேஸ்டல் பச்சை என நூற்றெட்டு வகைப் பச்சைப் புடைவைகளை வளாகத்துக்குள் பார்க்கலாம். ஆனால் அவற்றில் ஒரு ஜோடியைக் கூட கண்டுபிடித்துவிட முடியாது. ஒரே நிறமாக இருந்தால் டிசைன் வேறாக இருக்கும், பார்டர் கலர் மாறி இருக்கும். எல்லாம் ஒத்துப்போயிருந்தால் வாங்கிய கடையாவது வேறாக இருக்கும். அது போன்ற நுண்ணிய வேறுபாடுகள், வேலைப்பாடுகள், விலை, வாங்கிய இடம் குறித்த உரையாடல்கள் வாட்ஸப் குழுவில் விறுவிறுப்பாக நடைபெறும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!