‘ஸ்கொட்லான்ட் யார்ட் போலீஸை அழைத்து வந்து ஈஸ்டர் குண்டு வெடிப்பின் பின்னணியில் மகா மூளையாய்ச் செயற்பட்ட நபர்களின் முகங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவேன்’ என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, திடீரென்று திருவாய் மலர்ந்திருக்கிறார். இப்படித்தான் கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதியான போது கூட அள்ளிவிட்டார். நீதி வேண்டி நெடும் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கிறிஸ்தவத் திருச்சபையும் அப்போது மெளனமாய் வேடிக்கை பார்த்தது. தட்டுப்பாடுகள் ஒன்றே தேசிய அடையாளமாய் இருந்ததால் அந்நாளில் யாருக்கும் வயிற்றுப் பசியைவிட வேறு ஒன்றுமே பெரிதாய்த் தோன்றவில்லை. அன்று தேசமே திவாலான நிலையில் ஜனாதிபதி இருக்கையின் சீட் நுனியில் அமர்ந்தவர் படிப்படியாய் தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டதும் வழக்கமான தென்னாசிய அரசியல்வாதிக்கே உரிய கல்யாண குணத்துடன் மறந்து போனார். அல்லது வேலைப் பளுவில் ஒன்றிப் போய்விட்டார்.
இதைப் படித்தீர்களா?
பாகம் 2 51. ஆயுதம் இருள் முற்றிலும் விலகியிருக்கவில்லை. இரவெல்லாம் நடந்த களைப்பில் சிறிது அமர்ந்து இளைப்பாறலாம் என்று தோன்றினாலும், உடனே வேண்டாம்...
51. பாமரரும் மற்றவரும் காந்தியின் சென்னை வருகையைப்பற்றிப் பல இதழ்களும் செய்தித்தாள்களும் கட்டுரைகளை வெளியிட்டிருந்தன. அவற்றில் காந்தியின்...
Dear Mr.Zafar,
Sorry for not writing in Tamil.
Your writing are inspiring me.
Keep righting and keep growing……..