Home » பிரதமராகும் ராப் பாடகர்
உலகம்

பிரதமராகும் ராப் பாடகர்

Oplus_16908288

மார்ச் ஐந்தாம் தேதி நேபாளத்தில் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. செப்டம்பரில் ஏற்பட்ட ஜென் ஸீ கலவரத்துக்குப் பிறகு அங்கு நடைபெறும் பொதுத் தேர்தல் இது. அரசியல் குளறுபடிகளுக்குப் பெயர்போன பிராந்தியம். 1990ஆம் ஆண்டிலிருந்து இதுவரை முப்பத்து இரண்டு அரசுகள் பொறுப்பு வகித்திருக்கின்றன. அதில் ஒன்று கூட ஐந்து வருட ஆட்சியை முழுமை செய்தது கிடையாது.

பத்தொன்பது மில்லியன் வாக்காளர்கள். அதில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேர் முதல் முறை வாக்களித்திருக்கின்றனர். அறுபது சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன, ஆனால் எதிர்பார்த்ததை விட இது குறைவானதுதான். கூடிய விரைவில் முடிவுகளை வெளியிடும் பணிகள் நடந்து வருகின்றன.

போக்குவரத்து வசதியில்லாத பகுதிகள், கரடுமுரடான மலைக் கிராமங்கள் என ஓட்டுப் பெட்டிகளை எடுத்துச் செல்வதிலேயே அங்கு சவால்கள் அதிகம். நேபாளத்தில் முதல் தேர்தல் நாற்பத்து ஐந்து நாள்கள் நடைபெற்றது. அந்நாட்டில் இன்னமும் வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்படுவதால் வாக்குகள் கைகளாலேயே எண்ணப்படுகின்றன. மார்ச் ஒன்பதாம் தேதிக்குள் முழு முடிவுகளும் வந்துவிடும் என்று எதிர்பார்க்கின்றனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!