அடுத்த பிரிட்டிஷ் பிரதமராக வரப் போவது யார்? ஐரோப்பா முழுதும் இன்றைக்கு இதுதான் கேள்வி.
போரிஸ் ஜோன்சன் பதவி விலகுவதாக அறிவித்ததும், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டி அறிவிக்கப்பட்டது. போட்டியில் தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர்கள் மட்டுமே பங்குபற்றலாம். ஒருவர் போட்டியில் பங்கேற்க, குறைந்த பட்சமாக இருபது பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்றும் அறிவிக்கப்பட்டது.
கன்சர்வேடிவ் கட்சி விதிமுறைகளின் படி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். முதல் கட்டத்தில், போட்டியில் பங்குபற்றுபவர்களிலிருந்து இரண்டு பேரைத் தெரிவு செய்வது.
Add Comment