Home » நோபலுக்கு ‘நோ’
உலகம்

நோபலுக்கு ‘நோ’

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்குப் பல கனவுகள் உண்டு. கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பது, கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக ஆக்குவது, பனாமா கால்வாயை மீண்டும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது, மேற்கு அரைக்கோள நாடுகள் அனைத்திலும் தன் அதிகாரத்தை நிலை நிறுத்துவது, அதை அப்படியே உலகம் முழுதும் பரப்புவது போன்றவை அவற்றில் சில.

அவருடைய ஆகப் பெருங்கனவாக இருப்பது அமைதிக்கான நோபல் பரிசை வெல்வது. அது சென்ற ஆண்டே தனக்குத் தரப்பட்டிருக்க வேண்டுமெனத் திடமாக நம்புகிறார் டிரம்ப். உலக அமைதிக்காக இதுவரை எட்டுப் போர்களைத் தடுத்து நிறுத்தினேன் என்று தற்பெருமை பேசுபவரிடம் ‘போர்களை நிறுத்தியது போல் கனவு ஏதும் கண்டீரா’ என்று கேட்க வேண்டும்.

அப்படி அவருடைய கனவில் மட்டுமே நிலைத்த உலக அமைதிக்காகத் தனக்கு நோபல் பரிசு தரப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தார். ஆனால் நோபல் கமிட்டி, அப்பரிசை மரியா கொரினா மச்சாடோ என்பவருக்குக் கொடுத்துவிட்டது. இவர் வெனிசுவேலாவைச் சேர்ந்த டிரம்ப் ஆதரவாளர். தன் நோபல் பரிசை வெனிசுவேலா மக்களுக்கும் அதிபர் டிரம்ப்புக்கும் சமர்ப்பணம் செய்தார் மச்சாடோ.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!