Home » வடகொரிய வஞ்சகக் கலைஞர்கள்
உலகம்

வடகொரிய வஞ்சகக் கலைஞர்கள்

பெரிய நிறுவனங்களில் பணி செய்ய விரும்பினால், பொருத்தமான காலியிடங்களுக்கு இணையதளங்கள் மூலமாக பலர் விண்ணப்பிப்பது உலக வழக்கம். அவற்றை வடிகட்டிச் சீர்தூக்கிச் சிறப்பான ஒருவரைத் தேர்ந்தெடுக்க மனிதவள அலுவலகர்களுக்கு நேரம் இருப்பதில்லை. வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களின் கல்வி முறை, அவற்றின் சான்றிதழ்களின் தகுதி, நேர்மை, விண்ணப்பிக்கும் நபர்களின் பணிபுரியத் தேவையான கடவுச்சீட்டு எல்லாவற்றையும் சரிபார்க்கவும் யாருக்கும் நேரம் இருப்பதில்லை.அதற்கான மனிதவள வசதியும் இருப்பதில்லை (human resource). எனவே அமெரிக்காவில் பல நேரங்களில் அந்த வேலையை பொதுவாக நம்பகமான பல தனியார் நிறுவனங்களுக்குத் (recruiting agencies) தந்துவிடுவது வழக்கம்.

இதைத் தவிர இந்த நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கப் பல வடிகட்டும் முறைகளும், நேர்காணல்களும் உண்டு. ஆனால் ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுக்கப்பட்ட நிறுவனம், நல்ல ஊழியர்களைத் தொடர்ந்து கொடுத்து நல்ல பெயரைச் சம்பாதித்து விட்டதென்றால் மறுபடி சீர்செய்து பார்ப்பது இல்லை. வியாபாரம் பெருகப் பெருக இந்த தனியார் நிறுவனங்கள், சில சின்ன நிறுவனங்களை (taffing firms) நம்பத் தொடங்குகின்றன.

தொற்று நோய்க் காலத்திற்குப் பின் பலரும் வீட்டிலிருந்தே வேலை செய்யத் தொடங்கிய பின், கணினித்துறையில் இந்த ரிமோட் வேலைக் கலாசாரம் பயனுக்கு வந்தபின், பல நாடுகளிலிருந்தும், இன்னும் சிலர் பயணம் செய்தும் பணி செய்யத் தொடங்கினர். இதனால் இந்தியா போன்ற நாடுகளுக்குப் பல திட்டங்கள் சென்றன. இந்தியாவில் இருந்து அமெரிக்கா போன்ற நாடுகளில் வசிப்பவர்கள் தாய் நாட்டுக்குச் சென்று அங்கே இருந்தபடிகூட சில மாதங்கள் பணி செய்ய முடிந்தது. ஆனால், இந்த நிலையில் இருந்த சில கவனக்குறைவுகளைச் சிலர் தவறாகப் பயன்படுத்தியதால் வந்த விளைவுகள் அமெரிக்காவைச் சற்றே கவலைப்பட வைத்திருக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!