Home » நீலமலை ரகசியம் – 13
தொடர்கள் நீலமலை ரகசியம்

நீலமலை ரகசியம் – 13

13. ஏணியும் பாம்புகளும்

அவர்கள் மலையேறத் தொடங்கியிருந்தார்கள். அத்தனை பெரிய குழுவின் மலையேற்றத்தை அந்த அமைதியான வனம் விரும்பவில்லை. காட்டு விலங்குகளின் உறுமல்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தன. பறவைகள் குழுக் குழுவாகப் பறந்து மற்ற விலங்குகளுக்குச் செய்தி சொல்லிக்கொண்டிருந்தன. சூரியன் வந்த பிறகும் பனிப்படலம் பரவி பாதையை மறைத்துக் கொண்டிருந்தது. முதல் சில மைல்களுக்கு முதல்குழு மட்டும் யானைகளைக் கொண்டு பாதை அமைத்துச் சென்றது.

காட்டை அகற்றி வழி அமைத்துக் கொடுத்து, மேலிருந்து கொடியசைத்தும், விசில் ஊதியும் சமிக்ஞை கொடுத்தது. பின்னர் கீழிருந்து சல்லிவன் தலைமையிலான குழு மேலேறி வந்தது. இதற்கே சிலமணி நேரங்கள் பிடித்ததில் சல்லிவன் எரிச்சலானார். இனி அவர்கள், இவர்கள் என்ற ஏற்றத்தாழ்வில்லை. எல்லோரும் சேர்ந்தே ஏறுவோம், இணைந்து பணியாற்றுவோம், ஒவ்வொரு குழுவாய் ஏறிக்கொண்டிருந்தால் நினைத்த நேரத்துக்குள் ஏற முடியாது என்று சொன்னார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!