Home » நீலமலை ரகசியம் – 22
தொடர்கள் நீலமலை ரகசியம்

நீலமலை ரகசியம் – 22

22. வெலிங்டன்

லஷிங்டன், சல்லிவன், கெல்சோவின் மிக முக்கியமான அடுத்த முன்னெடுப்பு ஒரு மிலிட்டரி பேரக்ஸை (Barracks) உருவாக்குவதாகத்தான் இருந்தது. ஆனால் அதனை ஊட்டியில் உருவாக்குவதை சல்லிவன் ஆரம்பம் முதலே எதிர்த்து வந்தார். உதகமண்டலம் ஒரு வாழ்விடமாக, அரசாங்க அலுவல்கள் நிகழும் தலைநகராக இருக்கலாம். அதற்குள் ராணுவப் பயிற்சி மையமோ, பேரக்ஸோ வரவேண்டாம் என்பது அவரது எண்ணம். கெல்சோவிற்கு ராணுவமே தலையாய விஷயம். அது நகருக்குள்ளேயே இருப்பதுதான் நல்லது என்பது அவருடைய எண்ணம். இரண்டு பேரின் கருத்துகளையும் கேட்டுக்கொண்ட லஷிங்டன், சர்வேயர்களின் கூட்டத்தை நடத்தினார். நீலமலையில் வொட்டகமண்ட் போலவே சமவெளியாகவும் வசதியாகவும் உள்ள இடங்களின் பட்டியல் கோரப்பட்டது.

குன்னூர் மலைப்பாதை போடப்பட்டுக்கொண்டிருந்தபோது, வழியிலிருந்த ஜெகதளா என்ற கிராமத்தைப் பற்றிய குறிப்புகள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்திருந்தன. கிட்டத்தட்ட உதகமண்டலத்தின் சூழலைக்கொண்ட, நிச்சயம் ஒரு சிறு நகராக்கவல்ல எல்லாத் தகுதிகளும் இந்தப்பகுதிக்கு இருப்பதாக எல்லா ஆவணங்களும் பரிந்துரை செய்தன. அந்த இடம் ராணுவ பேரெக்ஸ் எனப்படும் படைவீரர்களின் பயிற்சி மற்றும் குடியிருப்புக்கேற்ற இடமாகத் தேர்வு செய்யப்பட்டது.

ராணுவம் மலையேறி வருகிறது என்பது பழங்குடியினரை அச்சுறுத்தியது. சல்லிவன் மலையிறங்கிச் சென்றபிறகு, வேலைகள் மிகத் துரிதமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. உள்ளூர் மக்களின் கோரிக்கைகளைப் பற்றிக் கேட்கவோ, அவர்களின் கருத்துகளைப் பரிந்துரை செய்யவோ பிரிட்டிஷ் பக்கத்தில் செவிகளும் குரல்களும் இல்லாமல் போயின.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!