Home » நீலமலை ரகசியம் – 34
தொடர்கள் நீலமலை ரகசியம்

நீலமலை ரகசியம் – 34

மலர்கள், பழங்கள், பூங்காக்கள்

1840களின் தொடக்கத்தில் சானடோரியம் அமைக்கப்பட்டுப் பல பிரிட்டிஷ் குடும்பங்கள் மலையேறி வந்துவிட்ட பிறகு ஆங்கிலக் காய்கறிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. எல்லாவற்றுக்கும் கோயம்புத்தூரிலிருந்து வரும் வாகனங்களை எதிர்பார்க்க வேண்டியிருந்தது. வாரத்துக்கு அல்லது இரு வாரங்களுக்கு ஒருமுறை அவை வரும்போது, அனைவருக்கும் பங்கிட்டுக்கொடுத்த காய்கறிகளின் அளவு மிகக்குறைவாகவே இருந்தது.

ஜான் சல்லிவன் உருவாக்கியிருந்த தோட்டத்துக் காய்கறிகள் அப்போதைய பெரிய குடும்பங்களுக்கே சரியாக இருந்தன. ஆகவே காய்கறிகளை மொத்தமாக வாங்கி ஒரு பொது இடத்தில் சேமித்து வைத்துக்கொள்ளப்பட்டது. மூன்று ரூபாய் மாதச்சந்தா வாங்கிக்கொண்டு அனைத்து ஆங்கிலேயர்களுக்கும் இந்தக் காய்கறிகள் விநியோகிக்கப்பட்டன.

இந்த முறையிலும் நிறையக் குறைகள், பிழைகள் நேர்ந்தன. தட்டுப்பாடுகள் இருந்தன. எல்லோருக்கும் நிறைவாகக் காய்கறிகள் வழங்கமுடியாது போனது. முடிவாக, உதகமண்டலத்திலேயே மண் தரத்தினைச் சோதித்து, தோட்டக்கலையை விரிவாக்கி, காய்கறிகளை அதிகம் விளைவிக்கும் நோக்கம் உருவானது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!