Home » நீலமலை ரகசியம் – 35
தொடர்கள் நீலமலை ரகசியம்

நீலமலை ரகசியம் – 35

ஷூட்டிங் சொர்க்கம்

ஊட்டியை நேரில் காண்பதற்கு முன்னரே திரையில் கண்டு வளர்ந்த தலைமுறை நாம். அறுபதுகளிலிருந்தே உதகமண்டலம் அதன் எழில் பொங்கும் சூழலுக்காக திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு விருப்பமான தலமாக மாறிவிட்டிருந்தது. இதற்கு நான்கு தசாப்தங்களுக்கு முன்னர், 1930களில் உதகமண்டலத்தில் முதல் திரைப்பட ஷூட்டிங் நடந்திருக்கிறது.

சமன்லால் தூங்காஜி என்கிற தொழில் முனைவர் உதகமண்டலத்துக்கு மேற்கே தேயிலைத் தோட்டங்களை வாங்கி நிர்வகித்து வந்தார். அவர் குஜராத்திலிருந்து பெங்களூருவுக்கு வந்து செட்டில் ஆனவர். உதகமண்டலத்தின் சீதோஷ்ணம் அவருக்குப் பிடித்துப்போக, அங்கேயே சில தொழில்களை நிர்மாணித்தார். ஒரு பண்ணை வீட்டைக் கட்டிக்கொண்டு ஓய்வு தேவைப்படும்போதெல்லாம் வந்து போய்க்கொண்டிருந்தார்.

பல முதலீடுகளை ஈர்த்துக்கொண்டிருந்த அவருக்கு அப்போது வெளிவரத் தொடங்கியிருந்த பேசும் படங்களின் மீதும் ஈர்ப்பு வந்தது. மக்கள் நாடகங்களிலிருந்து சினிமாவுக்கு மாறும் காலம் வெகு அருகிலேயே இருப்பதாக உணர்ந்தார். ஆகவே சவுத் இண்டியன் ஃபிலிம்ஸ் என்ற புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கினார். தமிழில் முதல் கன்னடப் பேசும்படம் தன் பேனரில்தான் வரவேண்டும் என்று விரும்பினார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!