Home » ஒடிசாவின் நிழல் முதல்வர்: ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்
இந்தியா

ஒடிசாவின் நிழல் முதல்வர்: ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்

நவீன் பட்னாயக்- வி.கே.பாண்டியன்

ஜெய் ஜெகன்நாத்.

பிரசாரத்திற்குச் சென்றாலும் சரி. யாரையாவது சந்தித்தாலும் சரி…. வி.கே.பாண்டியனிடமிருந்து வரும் முதல் வார்த்தை இதுதான். ஒரு தேர்ந்த ஒடிய மாநில மண்ணின் மைந்தரைப் போல அவருடைய ஒட்டுமொத்தப் பேச்சும் மிகச் சரளமாக இருக்கிறது. செல்லுமிடமெல்லாம் ஒரு முதல்வருக்குக் கிடைக்கும் மரியாதையும் அவருக்காகக் காத்திருக்கும் மக்கள் திரளும் பா.ஜ.க.வைப் பதற்றமடையச் செய்திருக்கிறது. மாநிலத்தின் நிழல் முதல்வர் என எதிர்க்கட்சிகள் இவரை அடையாளம் காட்டுகின்றன.

2000-ஆம் ஆண்டிலிருந்து இப்போது வரை 24 ஆண்டுகளாக ஒடிசாவின் முதல்வராகப் பதவி வகிப்பவர் நவீன் பட்னாயக். இந்த முறையும் வெற்றி பெற்று முதல்வராகப் பதவியேற்றால் தொடர்ந்து அதிக நாட்கள் முதல்வராக இருந்த சாதனையைப் படைப்பார். அது சாத்தியம் என்பதை ஒடிய மக்களுடனான நம் உரையாடல் வழியாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

ஆரோக்கியமாக இன்னும் தீவிரமாக அரசியல் செய்து கொண்டிருக்கிறார் நவீன் பட்னாயக். அவருடைய வயதையும் உடல் நிலையையும் காரணம் சொல்லி பிஜு ஜனதா தளத்தின் அரசியல் முடிவுக்கு வருகிறது என்று பொய்ப் பிரசாரம் செய்ய ஆரம்பித்தது பா.ஜ.க.. காரணம் 2024-ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் இரு கட்சிகளுக்கிடையே உடன்பாடு எட்டப்படவில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!