எல்லாத்தையும் ஒட நொறுக்கு கொளுத்துனு வானம்பாடிகள் மாதிரி மடக்கிப்போட்டுக் கவிதைனு எழுதி கைத்தட்டல் வாங்கறது ஈசி. ஆனா சொசைட்டில இருக்கற இந்த இம்பேலன்ஸோட ஆரிஜின் எது. மனுஷ மனசுல அது எப்படி ப்ளே பண்றதுனு டீப்பா ஸ்டடி பண்ணிப் புரிஞ்சிக்கப் பாக்கறதுதான் சீரியஸ் ரைட்டரோட வேலை.
8 வெட்டி ஆபீஸர்
வேலை தெரிஞ்சவன் வேலையைப் பாப்பான். வெட்டி ஆபீஸர் அட்டண்டன்ஸ புடிப்பான் என்பது, அரசு அலுவலகங்களில் தொன்றுதொட்டு இருக்கும் புழங்குமொழி.
அவன் அதற்கு முன்பிருந்த பிரிவிலேயே, இருந்த கொஞ்ச நாட்களிலும் அடிக்கடி அட்டண்டன்ஸில் கையெழுத்துப் போட மறந்துபோய்விடுவான்.
மேசையின் நடுவில் கிடக்கும் அதை எடுத்துப் பார்த்துவிட்டு, ஆபீஸுக்கு வந்தமா அட்டண்டன்ஸ்ல கையெழுத்தப் போட்டமானு இருக்கணும். அதுதான் படியளக்கிற ஆபீசுக்கு குடுக்கற மரியாதை. பேசிக் டிசிப்ளினே இல்லேன்னா என்ன இருந்து என்ன பிரயோஜனம் என்று திருமதி காந்தியார் தமக்குத் தாமே சொல்லிக்கொள்வார். தன்னைத்தான் சொல்கிறார் என்று தெரிந்தாலும் அவன் காதிலேயே வாங்கிக்கொள்ளாதவன் போல இருப்பான்.
அவன் பெயரைச் சொல்லி கையெழுத்துப் போடச் சொன்னால்தான் சாரி என்று சொல்லிவிட்டுப் போடுவான். என்னை மதி நான் உன்னை மதிக்கிறேன் என்பது அவன் கொள்கை. ஆனால் அந்த அரசு அலுவலகத்திலோ உனக்கு மரியாதை கிடைக்கிறதோ இல்லையோ சம்பளம் கிடைக்கிறது இல்லையா, அதற்காக அதிகாரத்தை மதி; அதற்கு நன்றியோடு இரு; பென்ஷனும் கிடைப்பதால் சாகும் வரை அடிமையாய் இரு என்பதே, எழுதப்படாத சாசனமாக இருந்தது. குறைந்தது, அவனுக்கு அப்படித் தோன்றியது.
wonderful flow