‘போனமா வந்தமானு இல்லாம போன வெடத்துல எல்லாம் என்ன பராக்கு வேண்டியிருக்கு’ என்று தாமதாமக வருகிற எல்லோருமே சின்ன வயதில் எதோ ஒரு சமயத்தில் திட்டுவாங்கியிருப்போம் என்றால் இவன், எவ்வளவு அடி உதை பட்டாலும் பாராக்கு பார்ப்பதை வாழ்க்கையாகவே கொண்டிருந்தான்.
வளர்ந்து ஆளான பிறகும்கூட இது நமக்குத் தேவையா இல்லையா என்று இல்லாமல் பார்க்கிற எல்லாம் அவனுடைய ஆர்வத்தைத் தூண்டுபவையாக இருந்தன. எந்த நோக்கமுமின்றி தன்னை மறந்து அசட்டுத்தனமாக ஆவென வாய்பிளந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருப்பது அவன் இயல்பாகவே போய்விட்டிருந்தது.
Add Comment