Home » ஆபீஸ் – 49
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 49

49 முடிச்சுகள்

எப்போது உள்ளே கூப்பிடுவார் என்று குறுகுறுத்தது. ஒருமுறை பார்த்தது போதும். சும்மா சும்மா திரும்பிப் பார்க்கக்கூடாது என்று கட்டுப்படுத்திக்கொண்டான்.

லீவில் போய்விட்டு வந்தாலே, இல்லாதபோது என்ன நடந்ததென்று அதிகாரிகள் கேட்டுத் தெரிந்துகொள்கிறார்கள். சொந்தப் பணம்போட்டு நடத்துகிற வியாபாரம். எவ்வளவோ இருக்கும் என்று சமாதனப்படுத்திக்கொண்டு தெருவைப் பார்த்தான். நடந்துபோகிறவர்களின் நிழல்கள் காலடியில் நகர்ந்துகொண்டு இருந்தன.

போய்க்கொண்டிருக்கிற சம்பாஷணையைச் சிறிய இடைவெளிக்குப் பின் தொடர்வதைப்போல, ‘சொல்லுங்க’ என்று எதிரில் வந்து அமர்ந்தார் சுந்தர ராமசாமி.

வரச்சொல்லி உள்ளே அழைப்பார். எப்படிப் போய் உட்காரவேண்டும். கைகளை எப்படி வைத்துக்கொள்ளவேண்டும் என்று என்னென்னவோ யோசித்துக்கொண்டிருந்தவனுக்கு, திடுப்பென அவரே எதிரில் வந்து உட்கார்ந்ததும் என்ன செய்வதென்று தெரியவில்லை.

இதுபோன்ற தருணங்களில் எல்லோரும் செய்வதையே அவனும் செய்தான். ஹிஹி என்று அசட்டுத்தனமாக இளித்துவைத்தான். அவனுடைய திணறலைப் புரிந்துகொண்டவராக, ‘எங்கேந்து வரீங்க’ என்று அவரே ஆரம்பித்துவைத்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!