76 ம்க்கும்
‘சமீபத்துல நான் எழுதின எதையாவது படிச்சியா’ என்று கேட்டார் பாலகுமாரன், மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் வாசல் படிக்கட்டில் உட்கார்ந்திருந்தவனிடம்.
‘சமீபத்துல சிறுபத்திரிகைல எதாவது எழுதியிருக்கீங்களா என்ன’ என்று இவன் திருப்பிக் கேட்டான்.
‘ம்க்கும்’ என்று சொல்லிவிட்டு, ‘ஹலோ பாலா என்ன திடீர்னு இந்தப் பக்கம்’ என்றவரிடம் திரும்பிவிட்டார். உள்ளூர இவனுக்கு சிரிப்பாக வந்தது, வீசியது சரியான இடத்தில்தான் பாய்ந்திருக்கிறது என்று.
இரண்டு நாட்கள் முன்னதாக, ‘பாரதிய வித்யா பவன் கூட்டத்துல பாப்போம்’ என்று டிடிகே ஆபீசில் சுப்ரமண்யராஜு சொன்னதற்காகத்தான் அவன் அங்கு வந்திருந்தான். அவன் வருவதற்கு முன்பாகவே வந்துவிட்டிருந்த ராஜு அவனுக்குத் தெரியாத யாரிடமோ மும்முரமாகப் பேசிக்கொண்டு இருப்பதைப்போல இருந்தார். பாலகுமாரனும் சுப்ரமண்யராஜுவும் நெருக்கமாக இருந்தவர்கள். இருவருக்குள்ளும் பேச்சுவார்த்தை இல்லாமல் போனதற்கு மாலன்தான் காரணம் என்று ஒரு பேச்சு ஊருக்குள் உலவிக்கொண்டு இருந்தது. எவ்வளவு தூரம் உண்மையோ தெரியாது.
Add Comment