ஏஓவின் கர்ர்ரில் அலறியடித்துகொண்டு அவன் ஓடிவந்ததைப் பார்த்து இளித்த டிஓஎஸ், தினந்தோறும் நடக்கிற இந்தக் கூத்திற்கு இவ்வளவு நேரம்தான் ஒதுக்கமுடியும் என்பதைப்போல திரும்ப மேஜையில் கைகளை வைத்துக் கவிழ்ந்துகொண்டார்.
அடுத்து, இங்கிருந்து வரப்போகிற கொர்ர்ரை வேறு கேட்கவேண்டுமா என்பதைப் போல எழுந்து வெளியில் வந்தான். வெயில், தெருவையே சுட்டெரித்துக்கொண்டு இருந்தது. உச்சிகூடக் கடந்துவிட்டது இருந்தும் உக்கிரம் குறைந்தபாடில்லை. இத்தனைக்கும் இது மழைக்காலம். மெட்ராஸை கடல்தான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறதோ. எத்தனைக் காலம் இங்கே தள்ளவேண்டியிருக்குமோ என்று எண்ணியபடியே குர்த்தாவின் பக்கவாட்டு ஜேபியிலிருந்து சிகரெட் பாக்கெட்டை எடுத்தான்.
Amazing writing not a word out of place…was laughing uncontrollably. Maamallan is a gifted writer. Thanks to Madraspaper as well.