21 இலக்கியமாகவே வாழ்வது எப்படி?
சதா நேரமும் இலக்கியம் ஆக்கிரமித்திருக்கிற தன்னை, கேவலம் ரங்கன் துரைராஜுக்குத் தின்னக் கொடுப்பதா. அவன் பின்னால் இனி திரிவதில்லை. அந்த சனியனை மண்டையிலிருந்து மொத்தமகத் தூக்கியெறிந்துவிடுவது என்று சங்கல்பம் செய்துகொண்டான்.
பணம் என்ன பெரிய பணம். பணத்தோடா பிறந்தோம். அப்பாவின் அறிவுகெட்டத் தனமாய் குதிரைப் பந்தையத்திற்குப் போகிற பழக்கத்தால், சிறுவயதில் எவ்வளவு நாட்கள் பட்டிணியில் கிடக்க நேர்ந்திருக்கிறது. செத்தா போய்விட்டோம். எதுவோ என்னவோ நடந்து இப்போது நன்றாகத்தானே இருக்கிறோம். பால்யமே தொலைந்ததைப் பார்க்க ஆயிரம் ரூபாய் போனது ஒரு விஷயமா. எழுத்தில் சாதிக்க எவ்வளவோ இருக்கும்போது அந்த சல்லிப் பயல் பின்னால் திரிந்து தலையைக் கெடுத்துக்கொள்வானேன்.
Add Comment