Home » ஒரு குடும்பக் கதை – 115
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 115

115. நேரு மீது வெறுப்பு

அரசாங்கப் பொறுப்பு, கட்சிப் பொறுப்பு என எதிலும் இல்லாவிட்டாலும் நேருவின் மகள் என்ற ஒரு பெரிய தகுதியில், அப்பாவுக்கு உதவியாக இருந்தார் இந்திரா. குறிப்பாக, நேரு இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் இந்திராவும் கூடவே சென்றார்.

1952 குடியரசு தினம் டெல்லியில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட சமயத்தில், இந்தியாவின் பல்வேறு கிராமிய மற்றும் பழங்குடி மக்களின் பாரம்பரிய நடனங்களை ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்யும் பொறுப்பு இந்திராவுக்கு வழங்கப்பட்டது.

இந்திராவை அவர்கள் இந்தியாவின் இளவரசியாக மதித்தார்கள். இந்திராவுக்கும் கிராமிய, பழங்குடி மக்களுடன் நேரிடையான தொடர்பு புதிய அனுபவமாக இருந்தது.

அது மட்டுமில்லாமல், அந்த நடனக் குழுவினர்களுக்கு, குடியரசு தினத்துக்கு அடுத்த நாள் தீன் மூர்த்தி பவனில் ஒரு விருந்து கொடுக்கும் வழக்கத்தையும் இந்திரா துவக்கினார். அந்த விருந்தின்போது அப்பாவும், மகளும் முக மலர்ச்சியோடு, அனைத்து விருந்தினர்களோடும் பேசி, பாடி. ஆடி மகிழ்ந்தனர்.
நேரு எழுபது வயதாகி, முன்பு போலத் துடிப்புடன் இயங்க முடியாத முதுமைப் பருவத்திலும் கூட. குடியரசு தினத்துக்கு அடுத்த நாள் விருந்தளிக்கும் இந்த மரபு தொடர்ந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்