Home » ஒரு குடும்பக் கதை – 129
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 129

129. கை கொடுத்த கோவா

ஏற்கனவே இரண்டு பொதுத் தேர்தல்களையும், அதனோடு கூட மாநில சட்டப் பேரவைகளுக்கான தேர்தல்களையும் நடத்திய அனுபவம் பெற்றிருந்தது தேர்தல் கமிஷன். அதன் பயனாக, மூன்றாவது பொதுத்தேர்தலை எதிர்கொள்வது அதற்கு சுலபமாகத்தான் இருந்தது.

இந்தியாவின் முதல் தேர்தல் ஆணையாளராக இருந்த சுகுமார் சென் 1958ல் ஓய்வு பெற்றதை அடுத்து கே.வி.கே.சுந்தரம் அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டார். சில தொகுதிகளில் கடைப்பிடிக்கப்பட்ட இரட்டை உறுப்பினர்கள் முறை 1961 பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி முடிவுக்கு வந்தது.

தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி போர்ச்சுகீசிய காலனியாக இருந்த சுமார் 4000 ச.கி.மீ பரப்பளவு கொண்ட கோவா மற்றும் டையூ, டாமன் பகுதிகளை ராணுவ நடவடிக்கை மூலமாக மீட்டதை முக்கிய சாதனையாக பிரச்சாரம் செய்தது.

இந்தியாவின் கோவா மீட்பு நடவடிக்கை உண்மையில் ஓர் அசாதாரணமான நடவடிக்கைதான் என்பதில் ஐயமில்லை. இந்திய அரசாங்கத்தின் இந்த ராணுவ நடவடிக்கைக்கு “ஆபரேஷன் விஜய்” என்று பெயர்.

ராணுவ நடவடிக்கைக்கு முன்பாக கோவா மீட்பு முயற்சிகள் வேறு வகையில் நடந்தன. கோவாவிலேயே சில அமைப்புகள் தோன்றி, மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து, ஆதரவு திரட்டி, விடுதலைக்குப் போராடின.

சில போராளிக் குழுக்கள் ஆயுதமேந்தியும் களத்தில் இறங்கின. அவற்றுக்கு இந்திய அரசாங்கத்தின் மறைமுகமான ஆதரவும் இருந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!