Home » ஒரு குடும்பக் கதை – 135
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 135

135. இரண்டாம்இடம் யாருக்கு?

பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தியிடம் தனது அமைச்சரவையில் அவரும் இடம்பெற வேண்டும் என்று கேட்டபோது, அவர் தன் தந்தையை இழந்த சோகத்தைக் காரணம் காட்டி தனக்கு விருப்பமில்லை என்றார். அப்படிச் சொல்லிவிட்டாலும், சாஸ்திரி விடுவதாக இல்லை.

‘அமைச்சரவையில் இந்திரா காந்தி இடம் பெறுவது தனக்கு அனுகூலமாக இருக்கும்; மக்களுக்கும் நேருவின் ஆட்சி தொடர்கிறது என்ற நம்பிக்கை ஏற்படும்’ என அழுத்தமாக நம்பிய சாஸ்திரி இந்திரா காந்தியைத் தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளத் தீர்மானித்தார்.

இந்திரா காந்தி தனக்கு நெருக்கமானவர்களைக் கலந்தாலோசித்தார். எல்லோரும் எதிர்பார்ப்பது போல, நேரு பொறுப்பு வகித்த அயலுறவுத்துறையை ஏற்றுக் கொண்டால், நேருவையும், தன்னையும் ஒப்பிட்டு விமர்சனம் செய்வார்கள் எனக் கருதினார்.

அது மட்டுமில்லாமல், அயலுறவுத் துறை தொடர்பாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரால் பலமுறை நேருவே கடுமையான விமர்சனம் செய்யப்பட்டிருக்கிறார் என்பதையும் அவர் மறக்கவில்லை.

இந்தப் பின்னணியில், குறைந்த பணி அழுத்தம் கொண்ட தகவல் ஒலிபரப்புத் துறையை எடுத்துக் கொள்ள அவர் முடிவு செய்தார்.

இந்திரா மாதிரி, மொரார்ஜி விஷயம் சுமுகமாக முடியவில்லை. அவர் தனக்கு அமைச்சரவையில் நெம்பர் 2 அந்தஸ்த்து கொடுக்கப்படவேண்டும் என்று கறாராகக் கூறினார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!