156. மருமகள்
ராஜிவ் காந்தி, சோனியாவை மணந்து கொள்வதில் தீர்மானமாக இருப்பதைக் கண்ட இந்திரா காந்தி, மேற்கொண்டு தடையேதும் சொல்லாமல் அவர்கள் திருமணத்துக்குப் பச்சைக் கொடி காட்டிவிட்டார்.
ராஜிவுக்கு மிகுந்த மகிழ்ச்சி.
திருமணத்துக்குத் தேதி குறிக்கப்பட்டது. 25 பிப்ரவரி 1968.
ராஜிவ் – சோனியா சந்திப்புக்கு மூன்று ஆண்டுகள் கழித்து 1968ல் சோனியா இந்தியா வந்தார்.
மத்திய அரசின் வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு, பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு போனது. அவர்கள் சோனியா இந்தியா வருவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தார்கள்.
திருமணத்துக்கு முன்பாக 1968 ஜனவரி 13 ஆம் தேதி சோனியா தனது அம்மாவுடன் இந்தியா வந்திறங்கினார். ராஜிவ், சஞ்சய், அமிதாப் பச்சன் மூவரும் டெல்லி விமான நிலையம் சென்று அவர்களை வரவேற்றனர்.
பின்னாளில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில், “நான் ராஜிவ் மீது காதல் பைத்தியமாக இருந்தேன். அவருடன் சேர்ந்து வாழ்வதற்காக நான் உலகின் எந்த நாட்டுக்கும் சென்றிருப்பேன்” என்று குறிப்பிட்டார் சோனியா.















Add Comment