Home » ஒரு குடும்பக் கதை – 167
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 167

167. நானாஜி தேஷ்முக்
டெல்லியில் ஜூன் 25ஆம் தேதி மாலையில் நடைபெற்ற பிரம்மாண்டமான கூட்டத்தில் ‘லோக சங்கர்ஷ சமிதி’ (மக்கள் போராட்டக் குழு) தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அவ்வியக்கத்தின் பொதுச் செயலாளரான ஸ்ரீ நானாஜி தேஷ்முக் அது குறித்து ஆலோசனைகள் நடத்திவிட்டு, தில்லியில் தீனதயாள் ஆராய்ச்சிக் கழகத்தின் ஆறு அடுக்கு மாடிக்கட்டிடத்தின் ஆறாவது மாடியில் உறங்கிக் கொண்டிருந்தார்.
நள்ளிரவில் தொலைபேசி அலறியது. ‘இன்னும் ஒருமணி நேரத்தில் உங்களைக் கைது செய்ய போலிஸ் படை அங்கு வர இருக்கிறது’ என்று ஒரு பெண் குரல் அவரை எச்சரித்தது. உடனே இவர் புஷ்ஷர்ட், பேண்ட் அணிந்துகொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டார். அவர் சென்ற பிறகு போலிஸார் அங்கு வந்து சோதனையிட்டபோது எவரும் சிக்கவில்லை.
அங்கிருந்து புறப்பட்ட நானாஜி, பாலம் விமான நிலையத்திற்குக் காலை 4 மணிக்கு வந்தார். முன் திட்டப்படி, ஜெ.பி. அன்று காலை 5 மணிக்கு விமானம் மூலம் நாகபுரிக்குப் புறப்படுவதாக இருந்தது. ஆனால் ஜெ. பி மற்றும் பிற தலைவர்கள் நள்ளிரவில் கைதான தகவல் நானாஜிக்கு அதுவரை தெரியாது.
டெல்லி பாலம் விமான நிலையத்தில் ஏராளமான போலிஸார் காணப்பட்டனர். நானாஜி காரிலிருந்து இறங்கியவுடன் சாதாரண உடையிலிருந்த ஒரு போலிஸ்காரர் அவரை அணுகினார்.

Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!