51. காந்திஜியுடன் பிணக்கு
இந்தியாவுக்கென்று பிரத்யேகமாக ஒரு சுயஆட்சிச் சாசனத்தை உருவாக்குவது என்பது மிகப் பெரிய சவால் என்பது நேரு கமிட்டியினருக்கும், காந்திஜி போன்ற முக்கியத் தலைவர்களுக்கும் மிக நன்றாகவே தெரிந்திருந்தது. அதற்கு அடிப்படைக் காரணம் முஸ்லிம்களுக்கு இருந்த சிறுபான்மை குறித்த பயம்தான்.
ஆகவே, அவர்கள் தாங்கள் பெரும்பான்மையாக இருந்த பிராந்தியங்களில், (பஞ்சாப், வங்காளம்) அவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ற அளவில் பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என்றும், சிறுபான்மையாக உள்ள இடங்களில் இட ஒதுக்கீடு வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். மத்தியச் சட்டசபையில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் தங்களுக்கு ஒதுக்கப்படவேண்டும் என்பதும் அவர்களது கோரிக்கை. அரசியல்ரீதியாக இல்லாமல், முஸ்லிம்களுக்கென்று, முஸ்லிம் ஆசிரியர்கள் கொண்டு ஸ்பெஷல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்பது போன்ற பொதுவான பல்வேறு கோரிக்கைகளையும் முஸ்லிம்கள் அவ்வப்போது வலியுறுத்தி வந்தனர்.
Add Comment