103. பாபர் மசூதி
ஆரம்ப கட்டத்தில் ராஜாஜிதான் இந்தியக் குடியரசின் முதல் ஜனாதிபதி பதவிக்குத் தகுதியானவர் என நேரு, படேல் இருவரும் எண்ணினாலும், நேருவின் எதேச்சாதிகாரத்துக்கு ஒரு முட்டுக்கட்டை தேவை என நினைத்த படேல், காங்கிரஸ் கட்சிக்குளேயே பலர் ராஜாஜியை ஜனாதிபதியாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்பதை அறிந்தவுடன் இதுவே நேருவுக்குப் பதிலடி கொடுக்க சரியான சமயம் என முடிவு செய்து ராஜேந்திர பிரசாத் பக்கம் சாய்ந்தார்.
ஆனாலும் அவருக்கு நாம் ராஜேந்திர பிரசாதுக்கு ஆதரவு தெரிவித்து, ஒருவேளை அவர் நேரு சொன்னார், மனசாட்சி சொன்னது என்று எதாவது காரணம் சொல்லி பின்வாங்கிவிட்டால், அது நமக்கு மூக்குடைப்பு ஆகிவிடுமே என்ற சந்தேகமும் இருந்தது. ஆனால் ஜனாதிபதி ஆவதில் ராஜேந்திர பிரசாத் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். சூழ்நிலையை நன்கு புரிந்து கொண்ட ராஜாஜி, தான் ஓய்வு பெற விரும்புவதாக அறிவித்தார்.
ராஜாஜி ஜனாதிபதி ஆவதை காங்கிரஸ் கட்சியினர் ஏன் விரும்பவில்லை என்பதற்குக் கட்சிக்காரர்கள் பல காரணங்கள் சொன்னார்கள். அவர் இந்தி பேசும் மாநிலத்தைச் சேர்ந்தவர் இல்லை. அவருக்கு சரளமாக இந்தி பேசத் தெரியாது. தவிர, ராஜாஜி தன் கறார், கண்டிப்புக் காரணமாக கட்சியினர் சிலரது வெறுப்பை சம்பாதித்துக் கொண்டார்.
அந்தக்கால அரசியலையும் தலைவர்களின் மனநிலையையும் விளக்கும் அருமையான தொடர். வாழ்த்துகள்!