வண்ணக் காகிதங்களில் லட்சக் கணக்கான தொகையை அச்சிட்டுச் சுண்டி இழுக்கும் கலாசாரம்தான் இல்லாமல் போனதே தவிர, ஆன்லைன் லாட்டரிகள் அமோகமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஆதியில் கே.ஏ.எஸ். சேகர் இருந்தார். பிறகு மார்ட்டின் இருந்தார். பின்னும் பல பெரும் புள்ளிகள் லாட்டரி உலகின் முடி சூடா மன்னர்களாக உலா வந்து ஓய்ந்து போனார்கள். தமிழகத்தில் லாட்டரி தடை செய்யப்பட்டுப் பல்லாண்டுக் காலம் ஆகிவிட்டாலும் லாட்டரி என்னும் ‘இயக்கம்’ முற்றிலுமாக நின்று போகவில்லை.
வண்ணக் காகிதங்களில் லட்சக் கணக்கான தொகையை அச்சிட்டுச் சுண்டி இழுக்கும் கலாசாரம்தான் இல்லாமல் போனதே தவிர, ஆன்லைன் லாட்டரிகள் அமோகமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
பல மாநிலங்களைச் சேர்ந்த லாட்டரி நிறுவனங்கள் இத்தொழிலில் இன்று ஈடுபட்டுக்கொண்டிருந்தாலும் தமிழகத்தைப் பொறுத்தவரை ஆன்லைன் சூதாட்ட நேசர்களின் விருப்பத்துக்குரிய லாட்டரியாக கேரள மாநில லாட்டரிகளே உள்ளன. இரண்டு நாள்களுக்கு முன்பு இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் பத்துக் கோடி ஜாக்பாட் அடித்தார் என்று செய்தி வந்தது. அதைப் பார்த்துவிட்டு எத்தனைப் பேர் புதிதாகப் படையெடுத்திருக்கிறார்களோ தெரியாது.
ஆனால் டாஸ்மாக் போலவே இந்த ஆன்லைன் சூது பல குடும்பங்களை சத்தமில்லாமல் நிர்மூலமாக்கிக்கொண்டிருப்பது வெளியே தெரிவதில்லை என்பது மட்டும் உண்மை.
குறிப்பாகப் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்கள் இந்த ஆன்லைன் லாட்டரிகளால் மிக அதிகம் பாதிப்படைகின்றன. இது பெரும்பாலும் சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் அதிகம் பரவியிருக்கிறது. பெரிய வருமானமில்லாமல் அவதிப்படும் எளிய மக்கள், இந்த லாட்டரிகளிலாவது ஏதாவது கிடைத்துவிடாதா என்கிற நப்பாசையில் சிறிய அளவில் இவற்றில் முதலீடு செய்ய ஆரம்பிக்கிறார்கள். விரைவில் அது ஒரு போதையாகிறது. வெறியாகிறது. விட்டுத் தொலைக்க முடியாத பழக்கமாகி, கையிருப்பு மொத்தத்தையும் சூதில் இழந்து அவதிப்படுகிறார்கள்.
ஒரு விஷயம்…
நல்ல பயனுள்ள தகவல். சற்றே ஆதரவுத் தொனி (லாட்டரி பற்றி அறியாதவர்க்கு ஆர்வமூட்ட) ஒலிப்பதாகப் பட்டது எனக்கு மட்டுமே கூட இருக்கலாம். சூது கவ்வுவது உண்மைதான். எத்தனை கோடி மோசடி வைத்தாய் இறைவா.