நீங்கள் ஓர் உணவகத்துக்கோ ஆலயத்திற்கோ சென்றால் அங்கே வரும் மனிதர்களைக் கவனியுங்கள். உங்களை அறியாமல் என்ன செய்கிறீர்கள் என்பதை நீங்களே கவனித்துப் பாருங்கள். சென்று இறங்கிய நேரம் முதல் உங்களையே அறியாமல் எத்தனை புகைப்படங்கள் எடுத்தீர்கள், நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள, குறிப்புகள் எழுத என உங்கள் மனம் அருகில் இருப்பவர்களை விட்டுவிட்டு எங்கோ சென்றுவிடுவதை உணர்வீர்கள்.. இயற்கைக் காட்சிகளைக் கூட காமெராவின் மூலமே பார்ப்பது பலருக்கு வழக்கமாகியிருக்கிறது.
உடன் பணி புரியும் ஒரு நண்பருக்குப் பிறந்த நாள் என ஓர் உணவகத்திற்குக் கூட்டமாக வருகிறார்கள். வந்து அமர்ந்த உடன் அவரவர் அலைபேசியை எடுத்து முதலில் செய்யும் வேலை, அந்த உணவக உணவுப்பட்டியலைத் தங்கள் செல்ஃபோனில் படியெடுத்து மெனு பார்ப்பதுதான். உணவு வந்தவுடன் புகைப்படம் எடுப்பது, மற்ற முகமறியா நண்பர்களுடன் இணையத்தில் பகிர்வது எனத் திரும்பிச்செல்லும் வரை உரையாடுவது செல்ஃபோனில்தான். பல இந்திய உணவகங்களில் இங்கே அமெரிக்காவிலும் உணவுப்பட்டியல் (மெனு) தருவதில்லை. QR ஸ்கேன் செய்துதான் பார்க்க வேண்டும்.
கூட்டத்தில் தனியாகிறேன் என்பதெல்லாம் சிலருக்கே சாத்தியமானவை. அந்தத் தனிமை வேறு. ஏனெனில் அவர்கள் விரும்புகிறபோது அவர்களால் அந்தத் தனிமையில் இருந்து விலகி கூட்டத்துக்குள் கலக்க முடியும். ஆனால் சிலரோ மனதளவில் ஒரு விழாக்கூட்டத்தில் கூட இருக்க இயலாமல் தனிமையை உணர்கிறார்கள். வீட்டில் பலருடன் இருக்கும் போதே தனியாக உணர்வது.
மே 8 நம் தேதி வெளிவந்த+2தேர்வு முடிவுகளின்படி ஆண் மாணாக்கர்களின் எண்ணிக்கை (வெற்றி சதவீதம் அல்ல) குறைந்துள்ளது. புதுச்சேரியிலும் இதே நிலைதான்.
ஆண்களின் பிறப்பு வீதம் குறைகிறதா?
இது குறித்து இது வரை எந்த ஒரு விவாதமும் நடைபெற்றதாக தெரியவில்லை. இது குறித்து ஏதேனும் கட்டுரை எழுத வாய்ப்புள்ளதா