Home » ஆப்கன்-பாக்: போராக உருவெடுக்கும் மோதல்கள்
உலகம்

ஆப்கன்-பாக்: போராக உருவெடுக்கும் மோதல்கள்

கடந்த பிப்ரவரி 27, 2026 அன்று ஆஃப்கனிஸ்தான் மீது நேரடிப் போர்ப் பிரகடனத்தை பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் ஆஃப்கனிஸ்தான் மீது ‘ஆபரேஷன் கசாப்-லில்-ஹக்’ (Operation Ghazab-Lil-Haqq) என்ற பெயரில் பெரிய அளவிலான ஒரு ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. இதற்கு ஆஃப்கனிஸ்தானும் பதிலடி கொடுத்து வருவதால், பாகிஸ்தான்-ஆஃப்கனிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

​ஆஃப்கனிஸ்தான் தாலிபன்கள் உருவான வரலாற்றில் பாகிஸ்தானுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. 1980களில் சோவியத் யூனியனுக்கு எதிரான போரின்போது, லட்சக்கணக்கான ஆஃப்கன் அகதிகள் பாகிஸ்தானுக்கு வந்தனர். எல்லைப் பகுதிகளில் இருந்த மதப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களே பின்னாளில் தாலிபன் அமைப்பை உருவாக்கினர்.

​2001ஆம் ஆண்டு அமெரிக்கா ஆஃப்கனிஸ்தான் மீது போர் தொடுத்தபோது, அங்கிருந்த தாலிபன்களும் அல்-கொய்தா அமைப்பினரும் தப்பிப் பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளுக்குள் நுழைந்தனர். அங்கு வாழ்ந்த பஷ்தூன் பழங்குடியின மக்கள் அவர்களுக்குப் புகலிடம் அளித்தனர். அமெரிக்காவின் அழுத்தத்தினால் 2002 முதல் 2004 வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் கைபர் பக்துன்வாவில் தேடுதல் வேட்டை நடத்தியது. இது பஷ்தூன் போராளிகளிடையே பெரும் கோபத்தை உண்டாக்கியது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!