உலகளாவிய திரையுலகம் பாகிஸ்தானியர்களை இரண்டு வகைகளில் காட்சிப்படுத்தும். ஒன்று அவர்கள் ஆகப்பெரிய தீவிரவாதிகளாக இருப்பார்கள். அல்லது மிகப்பெரிய வில்லன்களுக்கு உதவும் கம்ப்யூட்டர் ஹேக்கர்களாக.
இதில் பாகிஸ்தானின் தீவிரவாத முகமென்பது உலகறிந்த பழைய செய்தி. பத்தாண்டுகளுக்கு முன்னால் அதன் ஹேக்கிங் தீவிரத்தை அறிந்துகொண்ட போதுதான் உலகம், “கழுதை மேய்க்குற புள்ளைக்கு இவ்வளவு அறிவா” என்று செந்திலை வியக்கும் கவுண்டமணியைப்போல சற்றே அதிர்ந்தது.
பாகிஸ்தானில் பள்ளியிலேயே ஹேக்கிங்க்கினை அறிமுகப் படுத்திவிடுகின்றனர் எனும் செய்தி ஆச்சர்யமாக இருந்தது.
என்னதான் தீவிரவாதிகளை ஏவி, அமிதாப் பச்சனை ஹேக் செய்தாலும் அவர்கள் தலையில் கொட்டி காமெடி பீஸாகத்தான் இந்தியா வைத்திருக்கிறது. லகுடபாண்டி, ஜில் ஜில் ரமாமணி என்று நமக்குத் தெரிந்த உவமைகள் சொல்லி கட்டுரையை எழுதியிருந்த விதம் சிறப்பு