19. மாதச் செலவு எவ்வளவு?
A என்பவர் மாதம் 100 ரூபாய் சம்பாதிக்கிறார். அவருடைய மாதச் செலவுகள் 90 ரூபாய்.
B என்பவர் மாதம் 200 ரூபாய் சம்பாதிக்கிறார். அவருடைய மாதச் செலவுகள் 210 ரூபாய்.
வெளியிலிருந்து பார்க்கிறவர்களுக்கு Aயைவிட B இருமடங்கு சம்பாதிக்கிறார் என்பதுமட்டும்தான் தெரியும். அதனால், Aயைவிட Bதான் பெரிய பணக்காரர், அவர்தான் இன்னும் மகிழ்ச்சியாக வாழ்கிறார் என்று அவர்கள் எண்ணக்கூடும். மேலோட்டமான பார்வைக்கு அது உண்மையாகக்கூடத் தோன்றலாம்.
ஆனால், தொலைநோக்கில் சிந்தித்தால், A தன்னுடைய வரவுக்குள் செலவுகளைக் கட்டுப்படுத்தி வாழ்கிறார். இதனால், அவருக்கு மாதாமாதம் தேவையில்லாத பதற்றமோ கவலைகளோ இருக்காது. அவருடைய சேமிப்பு சிறியதுதான் (10%) என்றாலும், அந்தச் சேமிக்கும் பழக்கத்தை ஒழுக்கத்துடன் தொடர்ந்தால், அந்தச் சிறு தொகையைச் சரியான விதத்தில் முதலீடு செய்தால் அடுத்த பத்து, இருபது ஆண்டுகளில் அவர் கணிசமாகச் சொத்து சேர்த்துவிடலாம்.
Add Comment