Home » பணம் படைக்கும் கலை – 45
தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 45

45. பாதுகாப்புக்கு முதலிடம்

இன்றைக்கு நாம் தொலைக்காட்சியைத் தொடங்கினால் நூற்றுக்கணக்கான சானல்கள் வந்து குவிகின்றன. போதாக்குறைக்குக் கணினியிலும் மொபைல் செயலிகளின் வழியாகவும்கூடப் பலப்பல சானல்கள் கண் சிமிட்டுகின்றன. நாம் எதைப் பார்ப்பது என்று திணறிப்போகிறோம்.

ஆனால், முன்பொரு காலத்தில் இந்தியாவில் தொலைக்காட்சி என்றால் தூர்தர்ஷன்தான். வேறு சானல்களே கிடையாது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதைத்தான் பார்த்தாகவேண்டும்.

முதலீட்டு உலகமும் முன்பு அப்படித்தான் இருந்தது. 99.99% இந்தியர்களுக்கு ‘முதலீடு’ என்றாலே ஃபிக்சட் டெபாசிட் (சுருக்கமாக FD) எனப்படும் நிரந்தர இட்டுவைப்புமட்டும்தான் தெரியும். தங்களுடைய சேமிப்புக் கணக்கில் இருக்கும் பணம் இப்போதைக்குத் தேவையில்லை என்றால் அதை FDக்கு மாற்றுவார்கள். அது முதிர்ச்சியடைந்ததும் அந்தப் பணத்தை எடுத்துச் செலவு செய்வார்கள், அல்லது இன்னோர் FDயில் இட்டுவைப்பார்கள். ஏனெனில், அன்றைக்கு வேறு முதலீட்டு வழிகள் இல்லை, அல்லது, அவற்றின்மீது மக்களுக்கு நம்பிக்கை வரவில்லை.

இத்தனை ஆண்டுகள் கழித்து இன்றைக்கும் இந்தியாவில் FD ரசிகர் கூட்டம் வலுவாகத்தான் இருக்கிறது. இடையில் மற்ற பல முதலீட்டு வழிகள் அறிமுகமாகி, பரவலாகி, பொதுமக்களிடையில் புகழ் பெற்று, அவற்றில் பணம் போடுவது மிகவும் எளிதாகிவிட்டபிறகும்கூட, ‘அதெல்லாம் எனக்குச் சரிப்படாது. FDல வர்ற வட்டி போதும்’ என்று சொல்கிறவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். இவர்களுடைய வாழ்நாள் சேமிப்பின் பெரும்பகுதி FD வடிவில்தான் இருக்கும். ‘ஐந்து ஆண்டுகளில் இந்த FD முதிர்வடையும். அதை வைத்து என் மகளுடைய கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்துவேன். அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்த FD முதிர்வடையும். அந்தத் தொகையை அவளுடைய திருமணச் செலவுகளுக்குப் பயன்படுத்திக்கொள்வேன்’ என்பதுபோல்தான் இவர்களுடைய நிதித் திட்டம் அமைந்திருக்கும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!