47. வீடு, நிலம், இன்னபிற
என்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவர் கோயம்பத்தூரில் சொந்த வீடு வைத்திருந்தார். அந்த ஊரிலிருந்து மாற்றலாகிப் போகும்போது அதை விற்றுவிட்டார்.
அதன்பிறகு, இன்றுவரை அவர் பல இடங்களில் வசித்திருக்கிறார். ஆனால், எங்கும் சொந்த வீடு வாங்கவில்லை. திரும்பத் திரும்ப வாடகை வீடுதான்.
‘உங்க வேலை அடிக்கடி மாற்றலாகுதுன்னுதான் நீங்க சொந்த வீடு வாங்கலையா?’ என்று அவரிடம் ஒருமுறை கேட்டேன்.
‘அது ஒரு காரணம்’ என்று சிரித்தார் அவர், ‘ஆனா, அதைவிட முக்கியமான இன்னொரு காரணம் இருக்கு.’
‘என்னது? பணம் இல்லைன்னு சொல்லப்போறீங்களா? உங்களுக்கு வர்ற சம்பளத்தைக் கேள்விப்பட்டா வங்கிக்காரங்க கூப்பிட்டு உட்காரவெச்சுக் கடன் கொடுப்பாங்களே!’
‘பணம் ஒரு சிக்கலே இல்லை. நான் நினைச்சா இப்பவே முழுத் தொகையையும் கொடுத்து நாலு வீடு வாங்கலாம்’ என்றார் அவர், ‘ஆனா, நான் வாங்கமாட்டேன். எனக்கு வாடகை வீடு போதும். ஏன்னா, அதுதான் நிதி அடிப்படையில சரியான தீர்மானம்.’
Add Comment