51. அலகு குவித்தல்
எங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள காய்கறிக்கடையில் ஒரு தேங்காய் 45 ரூபாய். சில கிலோமீட்டர் தள்ளியுள்ள தேங்காய் மண்டியில் சென்று வாங்கினால் அதன் விலை 35 ரூபாய்தான்.
அதாவது, மொத்த விற்பனையாளரிடம் தேங்காயை நேரில் வாங்குவதன்மூலம் நாம் 10 ரூபாய் சேமிக்கலாம். அதே தேங்காயைக் கடையில் சென்று வாங்கினால் நாம் கடைக்காரருக்கு 10 ரூபாய் கூடுதலாகத் தரவேண்டும். அதுதான் அவருடைய லாபம்.
இதே கணக்கு மியூச்சுவல் ஃபண்ட் துறையிலும் உண்டு. நம்மைப் போன்ற பொதுமக்கள் மியூச்சுவல் ஃபண்ட்களில் இருவிதமாக முதலீடு செய்யலாம்:
* வழக்கமான திட்டங்கள் (Regular Plans) : கடையில் தேங்காய் வாங்குவதுபோல, மியூச்சுவல் ஃபண்ட் விற்பனையாளர் ஒருவரிடமிருந்து வாங்குகிறோம். அதனால், விலை (அதாவது, Expense Ratio) கூடுதலாக இருக்கும்.
* நேரடித் திட்டங்கள் (Direct Plans) : தேங்காய் மண்டியில் தேங்காய் வாங்குவதுபோல, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திடம் நேரடியாக வாங்குதல். அதனால், விலை குறைவு.
Add Comment