3. சம்பள ஆராய்ச்சி
நமக்குப் பணத்தைக் கொண்டுவரும் குழாய்களை வருவாய் மூலங்கள் அல்லது வழிகள் (Income Sources/Channels) என்கிறார்கள். இதை நாம் எளிமையாகப் ‘பணவழிகள்’ என்று சொல்வோம்.
எடுத்துக்காட்டாக, ஒருவர் அலுவலகம் சென்று வேலை பார்த்துச் சம்பளம் பெறுகிறார், இன்னொருவர் கடை வைத்துப் பொருட்களை விற்கிறார், வேறொருவர் ஒரு வீட்டைக் கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார், இன்னொருவர் வயலில் நெல் விளைவித்து, அதை அறுவடை செய்து விற்கிறார்… இப்படி ஒவ்வொருவரும் தங்களுடைய சூழ்நிலை, விருப்பங்கள், வாய்ப்புகள், தேவைகள், திறமைகளைப் பொறுத்து ஒரு வழியில் அல்லது பல வழிகளில் பணம் சம்பாதிக்கிறார்கள்.
சில தலைமுறைகளுக்குமுன்னால், ஒருவருக்கு ஒரு பணவழி போதும் என்கிற கருத்து இருந்தது. ஆனால் இன்றைக்கு, ஒன்றுக்கு மேற்பட்ட பணவழிகள் இருந்தால்தான் பாதுகாப்பு என்கிறார்கள், ஒரே ஒரு பணவழியோடு இருக்கிறவர்களை வலியச் சென்று கூடுதல் பணவழிகளைத் தேடச்சொல்கிறார்கள். அது ஏன்?
Add Comment