Home » தெய்வங்களின் திருமண நாள்
ஆன்மிகம்

தெய்வங்களின் திருமண நாள்

ஒன்றல்ல இரண்டல்ல. பத்துக்கும் மேற்பட்ட தெய்வத் திருமணங்கள் பங்குனி உத்திர நாளில் நடந்துள்ளன. இதனால் பங்குனி உத்திர விரதத்தைக் கல்யாண விரதம் அல்லது திருமண விரதம் என்று அழைக்கிறார்கள். தெய்வங்களின் திருமண நாள் என்றும் இது கொண்டாடப்படுகிறது. வழிபாட்டுக்குரிய மாதமாகப் போற்றப்படும் பங்குனி, கோடைக்காலத்தின் ஆரம்பம். எனவே விவசாயத்திற்கான முக்கியமான மாதமாக இது இருக்கிறது. இம்மாதத்தில்தான் முக்கியமான ஆலயங்களில் பிரம்மோத்சவ விழாக்கள் கொண்டாடப்படும். இவ்வாண்டு ஏப்ரல் பதினொன்றாம் தேதி இவ்விழா மிக விமர்சையாகக் கொண்டாடப்பட இருக்கிறது.

மாதங்களில் பன்னிரண்டாவது மாதமான பங்குனியும் நட்சத்திரங்களில் பன்னிரண்டாவது நட்சத்திரமான உத்திரமும் சேர்ந்து வரும் பௌர்ணமி நாள் பங்குனி உத்திரம் என்று கொண்டாடப்படுகிறது. இந்நாள்களில் முருகன் வழிபாடு பிரதானமாக இருந்தாலும், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தாயார் சேர்த்தி அதிமுக்கியமான ஒரு வழிபாடாக இருந்து வருகிறது. களத்திர தோஷம் இருப்பதால் திருமணம் நடைபெறாமல் தடைப்பட்டுத் தவிப்பவர்களும் இந்தச் சுக்கிர ஸ்தலமான ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் சேர்த்தி சேவை தரிசித்தால், தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். திருமணம் ஆகாத ஆண், பெண், மறுமணத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பவர்கள் என அனைவரும் இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும் என நம்புகின்றனர்.

இந்தத் திருநாளில் ஸ்ரீரங்கத்திலும் அறுபடை வீடுகளிலும் சிவாலயங்களிலும் மக்கள் படையெடுப்பது வழக்கம். திருமணத் தடைகள், குழந்தைப் பேறு, தம்பதியர் ஒற்றுமை, அரசுப்பணிகளில் வெற்றியென அனைத்தும் இந்த விரதத்தால் கைகூடுகிறது என்று நம்புகிறார்கள். இந்தத் திருநாளில் நீர்ப்பந்தல் அமைப்பது, மோர் தானம், விசிறி தானம், அன்னதானம், கோதுமை தானம், பாலாபிஷேகம் செய்வது போன்ற வழிபாடுகள் நன்மை பயக்கின்றன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பலனைத் தரக்கூடிய தானங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மோர் தானம் – வறுமை, விசிறி தானம் – அரசு தொடர்பான பிரச்னைகள் தீர, பாலாபிஷேகம் – வறுமை தீரவும், குழந்தை பாக்கியத்திற்கும், அன்னதானம் குடும்பம் செழிக்க எனப் பிரித்து வைத்துள்ளனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!