ஒரு கற்பனைக் கதாபாத்திரத்துக்கு பாஸ்போர்ட் கொடுத்திருக்கிறது பிரிட்டன். இம்மாதிரியான சுவாரசியங்களெல்லாம் இக்காலத்தில்தான் நடக்கும்.
பாஸ்டுசோ (Pastuso) என்ற கற்பனை கதாபாத்திரத்தின் பூர்வீகம் பெரு. நிலநடுக்கத்தால் எல்லாம் இழந்த பாவப்பட்ட ஜென்மம். அத்தைதான் ஒரே துணை. அத்தைக்கும் வயதாகிவிட்டது. எனவே, பிரிட்டனுக்குக் கப்பலில் அனுப்பிவைத்தாள் அத்தை. பிரிட்டனில் உள்ள பட்டிங்டன் என்ற நகரில் வந்து சேர்ந்து செய்வதறியாமல் தன்னந்தனியாய் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்த பாஸ்டுசோவை ப்ரெளன் குடும்பம் கண்டது. பாஸ்டுசோவிற்கு யாரும் இல்லை என்பதை அறிந்து, அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
“உன் பெயர் என்ன”?
பாஸ்டுசோவிற்கு தனது பெயர் பாஸ்டுசோ என்று தெரியவில்லை.
“சரி. உன்னை நாங்கள் கண்டெடுத்த இடம் பட்டிங்டன். இனிமேல் உன் பெயர் பட்டிங்டன்” என்று ப்ரௌன் குடும்பத்தினர் முடிவெடுத்தனர்.
“உன் வயது?”
பெயரே தெரியவில்லை அல்லவா. அதனால், வயதும் பட்டிங்டன் என்ற புதுப்பெயர் கொண்ட பாஸ்டுசோவிற்குத் தெரியவில்லை.
“இன்று உனக்கு ஒரு வயது என்று வைத்துக்கொள்ளலாம்.”
Add Comment