Home » சிறுகனூரில் ஒரு பெரும் சித்தர்
ஆன்மிகம்

சிறுகனூரில் ஒரு பெரும் சித்தர்

யோகா, தியானம் இந்த இரண்டுமே மனித குலத்திற்குக் கிடைத்த மாபெரும் வரங்கள். இவை நமது உடல், மனம் இரண்டினையும் சரிசெய்யும் சக்திவாய்ந்த கருவிகள். மூச்சுக் காற்று, உடல் இவற்றினை முறைப்படி கையாண்டு, எவ்விதம் வாழ்வாங்கு வாழ்வது என்பதைக் கற்றுக்கொடுக்கும் கலைகள் இவை. இவற்றின் மேன்மையறிந்து வெளி நாட்டினரும் கற்க ஆரம்பிக்க, சர்வதேசயோகா தினம் கொண்டாடும் அளவுக்கு இது உலகளவில் ஆழமாக வேரூன்றி விட்டது. யோகா, தியான முறைகள் இரண்டும் பாரதம் உலகுக்குக்கொடுத்த கொடையாதலால், அந்த வேர்களின் விதைகள் இங்குதான் இருக்கின்றன. விதைகள் வேர்விட்டு, விருட்சமாகி, உலகம் முழுவதும் கிளைவிட்டு பரவி நிற்கும் இந்தக் கலையை முறைப்படி வகுத்துக்கொடுத்தவர், பதஞ்சலி என்னும் சித்தர் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? ஆனால் அதுதான் உண்மை.

பதஞ்சலி, பதினெட்டு சித்தர்களில் ஒருவர். ஆதிசேஷனின் அவதாரம் என அறியப்படுபவர். தலையிலிருந்து இடுப்புவரை மனித உடலாகவும், இடுப்புக்குக்கீழே நாக உடலாகவும் தோற்றம் கொண்டவர். ஆதிஷேசனின் திருவுருவமாதலால், ஐந்துதலை நாகம் ஒன்று, இவரது தலைக்குமேலே குடைபிடித்ததுபோல் இருக்கும். இவரது அவதாரம் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று புராணங்களில் காணக் கிடைக்கிறது.

சிவபெருமானின் ஆனந்தக்கூத்தினைத் தனது மானசீகக் கண்களினால் கண்டு ரசித்துக்கொண்டிருந்தார் மஹாவிஷ்ணு. அந்த நடனம் தந்த களிப்பும், மகிழ்ச்சியும் அவரது தோற்றத்திலும், எடையிலும் மாறுதலைக் காண்பித்தது. பகவானை சுமந்துகொண்டிருந்த ஆதிஷேசனால் அந்த மாறுதலை உணர முடிந்தது. உடனே அவர் பக்தியோடு, பகவானிடம் அதற்கான காரணத்தினைக்கேட்க, மஹாவிஷ்ணுவும், சிவபெருமானின் ஆனந்தக்கூத்தினை ரசித்து விவரித்தாராம். அதனைக் கேட்டபின்பு, ஆதிஷேசனுக்கும் அந்த ஆனந்தக்கூத்தினைக் காண்பதற்கு ஆவல் பிறந்ததாம். பகவானிடமே அதற்கு உபாயம் கேட்க, பூவுலகுக்குச் சென்று காணும்படி கூறினாராம். ஆதிஷேசனும் ஒரு ரிஷிபத்தினியின் வயிற்றில் பிறக்கத் திருவுள்ளம் கொண்டு அத்ரி மஹரிஷி- அனுசுயை தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் என்கிறார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!