Home » தடாலடித் தலைவன்
இந்தியா

தடாலடித் தலைவன்

காக்கிநாடா துறைமுகத்தில் பவன் கல்யாண் ஆய்வு செய்து சில நடவடிக்கைகளை எடுத்தார். அதைப் பார்த்த ஜனசேனா கட்சியின் ஆதரவாளர்களான அவருடைய பக்தர்கள் (வார்த்தைப் பிழை அல்ல. பக்தர்கள்தான்.) கப்பலைப் பறிமுதல் செய் (Seize The Ship) ஹேஷ் டேக்கை சமூக வலைத்தளங்களில் பிரபலப்படுத்தினார்கள்.

ஏதாவது ஒன்றை அதிரடியாகச் செய்து ஆந்திர அரசியலில் பரபரப்பில் இருந்து கொண்டே இருப்பவர் பவன் கல்யாண். ஆம். அவர் செய்வது எல்லாமே பரபரப்புக்காகத்தான். அதற்கு சமீபத்திய ஓர் உதாரணம் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்துள்ளது என்ற சர்ச்சைக்கு அவருடைய எதிர்வினை. அந்த மாநிலத்தின் துணை முதல்வராக அதன் உண்மைத்தன்மையைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை. அதற்குப் பரிகாரமாக அந்தப் பாவத்தைக் கழுவுகிறேன் என்று அவரே தண்ணீர் ஊற்றித் துடைப்பத்தால் திருப்பதி மலையின் படிக்கட்டுகளைக் கழுவினார். அனைத்துப் படிக்கட்டுகளையும் கழுவவில்லை. ஒரு சில படிக்கட்டுகளை மட்டும் கழுவினார். இன்னொரு பரிகாரத்தையும் செய்தார். தவம் இருக்கப் போகிறேன் என்று சொல்லி காவி உடை தரித்து தவமிருந்தார்.

மேலும் சில உதாரணங்கள் உள்ளன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போது ஆந்திராவில் சட்டமன்றத் தேர்தலும் இணைந்து நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் என்னை யாராவது தவறாகப் பேசினால் செருப்பால் அடிப்பேன் என்றார். சொன்னதோடு நில்லாமல் அணிந்திருந்த செருப்பை கழற்றிக் காட்டினார். ஒரு கட்சித் தலைவர் இப்படியெல்லாம் செய்தால் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனால் அவர் செய்தால் ஏற்றுக் கொள்கிறார்கள். தேர்தலுக்காக அவருடைய பிரச்சார வாகனத்தை ராணுவ வாகனம் போல உருவாக்கியிருந்தார். அதற்கு வராகி என்றும் பெயர் வைத்திருந்தார். ராணுவ வாகனம் போல உள்ளது என்பதால் அந்த வாகனத்திற்கு மாநில அரசு முதலில் அனுமதி மறுத்தது. போராடி அனுமதி பெற்றார். காரினுடைய கூரையில் அமர்ந்து சென்றிருக்கிறார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!