பிலிப் ஐலண்ட் என அழைக்கப்படும் தீவு ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் உள்ளது. இது மெல்பேர்ன் நகரிலிருந்து 125 கிலோமீட்டர்கள் தென்கிழக்குப் பகுதியில் உள்ளது. தீவான போதிலும் இதனைக் காரில் சென்றடையலாம். இத்தீவினை இணைத்துக் கொள்ள ஒரு பாலம் உள்ளது.
இத்தீவில் ஒரு காட்சிக்கான சென்டர் உள்ளது. நாம் சென்ற அன்று உத்தியோகப் பூர்வமாக அனுமதி வழங்கும் நேரம் மாலை 6:30. ஏற்கனவே எமக்கு முன்னால் பத்துப் பேரளவில் வரிசையில் நின்றார்கள். எமது திறன்பேசியில் நாம் வாங்கிய அனுமதிச் சீட்டின் QR கோடினை ஸ்கான் செய்து உள்ளே விட்டார் ஒரு காவலர். உள்ளே போகுமுன் இருந்த ஒரு தொலைக்காட்சித் திரையில் இன்றைய காட்சி ஆரம்பமாகும் நேரம் அண்ணளவாக 08:15PM என்று காட்டிக் கொண்டிருந்தது. அக்காட்சிக்கு டிக்கெட் போட்டுப் பார்வையாளர்களை அனுமதித்தாலும் காட்சிக்குப் பொறுப்பானவர்களுக்குக் காட்சி எப்போது தொடங்கும் என்பது சரியாகத் தெரியாது. அதனால்தான் ஒரு குத்துமதிப்பாக நேரம் போட்டிருந்தார்கள். இதற்கான காரணம் காட்சியை நடத்தப் போகும் நாயகர்கள் கைக்கடிகாரம் அணிவதில்லை. அது மட்டுமல்லாது அவர்களுக்கு கடிகாரத்தில் நேரம் பார்க்கவும் தெரியாது.
Add Comment