Home » சீண்டித் தொழில் செய்
உலகம்

சீண்டித் தொழில் செய்

பீட்டர் நவாரோ

பீட்டர் நவாரோ, வெள்ளை மாளிகையின் வர்த்தகம் மற்றும் உற்பத்திக்கான மூத்த ஆலோசகர். டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர். அண்மையில் அவருடைய ஒரு கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் இந்தியாவைக் கண்டித்துப் பேசியிருந்தார் நவாரோ. அதில், இந்திய. மக்களைச் சுரண்டி ‘பிராமணர்கள்’ கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். முன்பொருமுறை இதே நவாரோதான் உக்ரைனில் நடப்பது ‘மோடியின் போர்’ என்ற அரிய கண்டுபிடிப்பையும் உலகுக்கு அறிவித்தார்.

எதற்காக இவர் இப்படிப் பேசுகிறார்? பீட்டர் நவாரோவின் பின்புலம் என்ன?

ஜூலை 17, 2024. மில்வாக்கி நகரம். குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு. டொனால்டு டிரம்ப் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராய் முன்மொழியப்பட்ட நான்கு நாள் கொண்டாட்டம்.

மாநாட்டின் மூன்றாம் நாள் இரவின் நட்சத்திரப் பேச்சாளராக மேடையில் ஏறினார் பீட்டர் நவாரோ. பலத்த ஆரவாரத்துக்கிடையே பத்து நிமிட உரை நிகழ்த்தினார். சட்டமியற்றும் துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை என அரசின் மூன்று முக்கிய அங்கங்களையும் கட்டுப்படுத்தும் முழு அதிகாரத்தை ஏன் தாங்கள் அடைய வேண்டுமென வாதிட்டுப் பேசினார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!