மரவேலை நடக்கும் ஒரு பட்டறையில் சமைத்துக் கொண்டிருக்கிறார் ஒருவர். ஒவ்வொரு முட்டையாக எடுத்து பாத்திரத்தின் விளம்பில் உடைத்து உள்ளே போடுகிறார். மூன்றாவதாக ஒரு முட்டையை எடுத்து உடைக்க முயலும்போது அது உடையவில்லை. சரியென்று வேறொரு பாத்திரத்தால் அடித்து அந்த முட்டையை உடைக்கப் பார்க்கிறார், அப்போதும் முட்டை உடையவில்லை.
ஆச்சரியப்பட்டு, ஒரு சுத்தியலை எடுத்து முட்டையை அடிக்கிறார். அப்போதும் முட்டை உடையாமல் கையிலிருந்து துள்ளி, பக்கத்திலிருந்த பித்தளை தண்ணீர் தவலையின் மீது பட்டு தவலையை ஓட்டை போட்டுவிடுகிறது.
கலவரப்பட்டு போகும் சமையல்காரர், அருகில் மேய்ந்து கொண்டிருக்கும் அந்த முட்டையைப் போட்ட கோழியைப் பார்க்கிறார். தீர்ந்துபோன ஃபெவிகால் டப்பாவிலிருந்து தானியத்தைக் கொத்தித் தின்றுகொண்டிருக்கிறது கோழி.















Add Comment