ஈரோடுக்கு அருகில் ஒரு வாழை விவசாயி. கடந்த சில நாட்களாகத் தனது தோட்டத்தில் இருக்கும் செடிகளில் ஏதோ நோய்வாய்ப்பட்டிருக்கிறது எனச் சந்தேகப்படுகிறார். வாழை இலைகளில் வெளிர் மஞ்சள் நிறத்தில் புள்ளிகளைப் பார்க்கிறார். அடுத்த நாட்களில் இவை விரிவடைந்து கரும்பழுப்பு நிறமாக மாறுகின்றன. உடனே தனது செல்பேசியை எடுத்து இலைகளைப் படம் எடுக்கிறார். அதில் இருக்கும் செயலி, செடியைத் தாக்குவது எந்த வகையான பூஞ்சை, அதற்கு எந்த மருந்தை அடித்தால் குணமாகும் என்கிற விடையைச் சொல்கிறது. அந்த வழியைப் பின்பற்றித் தாக்குதல் பரவுவதற்கு முன்பே அவரால் தனது தோட்டத்தைக் காப்பாற்ற முடிகிறது.
இது ஏதோ கற்பனை அல்ல, இந்தச் செயலி இவருக்கென்று விசேஷமாகச் செய்யப்பட்டதும் இல்லை. 2024இல் இந்தியாவில் சுமார் ஐந்து கோடிக்கும் அதிகமான சிறு, குறு விவசாயிகள் இந்த இலவசச் செயலியைக் கொண்டு தங்களின் பயிர்களைக் காப்பாற்றுகிறார்கள் என்றால் நம்பமுடிகிறதா?
பிளான்டிக்ஸ் (Plantix) என்கிற இந்தச் செயலியைப் பற்றி அறிந்துகொள்ள வாருங்கள், ஜெர்மனிக்குச் செல்வோம்.















Add Comment