Home » போப், ஆண்டவர் மடியில்
ஆளுமை

போப், ஆண்டவர் மடியில்

கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் மதத் தலைவரான போப் பிரான்சிஸ் (88), இத்தாலியின் வாட்டிகன் நகரத்தில் ஏப்ரல் 21ஆம் தேதி காலமானார். இரட்டை நிமோனியாவால் பல வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இறப்பதற்கு ஒரு நாள் முன்பு, செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தின் முகப்பில் தோன்றினார். உயிர்ப்பு ஞாயிறு வழிபாட்டுக்காகக் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களை நோக்கிக் கையசைத்து, பெருநாளுக்கான ஆசிகளைத் தெரிவித்தார்.

போப் பிரான்சிஸ் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமை குருவாகப் பன்னிரண்டு ஆண்டுகள் பொறுப்பில் இருந்தார். பிப்ரவரி 2013ல் பெனடிக்ட் தனது போப்பாண்டவர் பதவியை ராஜினாமா செய்தார். கத்தோலிக்கத் திருச்சபை வரலாற்றில், போப்பாண்டவர் தனது பதவியை ராஜினாமா செய்வது அதுவே முதல் முறை. மார்ச் 2013ல் பெர்கோக்லியோ புதிய போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கான்கிளேவ் எனப்படும் வாடிகனின் தலைமை குருமார்கள் பங்கெடுக்கும் ரகசிய வாக்கெடுப்பு முறையில் அவர் தேர்வு செய்யப்பட்டார். போப்பாண்டவராகப் பதவியேற்றதும், புனித பிரான்சிஸ் அசிசியின் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தன் பெயரை பிரான்சிஸ் என்று மாற்றி வைத்துக் கொண்டார். போப்பாண்டவராகப் பதவியேற்றதும், வாட்டிகன் நகரிலுள்ள சிஸ்டைன் தேவாலயத்தின் புகைபோக்கி, வெண்புகை கக்கியது. கத்தோலிக்கத் திருச்சபையின் வழக்கப்படி, அது புதிய போப்பாண்டவரை உலகத்துக்குப் பிரகடனப்படுத்தும் முறையாகும்.

பிரான்சிஸின் இயற்பெயர் ஹோர்ஹே மரியோ பெர்கோக்லியோ (Jorge Mario Bergoglio) . டிசம்பர் 17, 1936ல் அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸ்சில் பிறந்தார். அவருடைய குடும்பம் இத்தாலியைப் பூர்வீகமாகக் கொண்டது. பிரான்சிஸின் குடும்பத்தினர் கத்தோலிக்கக் கிறிஸ்துவத்தின் தீவிர பற்றாளர்கள். கத்தோலிக்கர்களுக்கு எதிரான முசோலினியின் பாசிச அரசைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அர்ஜெண்டினாவுக்குக் குடி பெயர்ந்தனர். தனது பன்னிரண்டாவது வயதில் சலேசிய பாதிரியார்களால் நடத்தப்படும் பள்ளியில் பிரான்சிஸ் சேர்க்கப்பட்டார்.

எல்லா தென் அமெரிக்கச் சிறுவர்களைப் போல, கால்பந்தில் பேரார்வம் கொண்டிருந்தார். டாங்கோ நடனமும் அவரை வெகுவாகக் கவர்ந்தது. தனது பதினேழாவது வயதில் கடவுளின் அழைப்பை உணர்ந்ததாகச் சொல்லுகிறார். ஒரு நாள் தன் நண்பர்களைக் காணும் பொருட்டு, புனித ஜோசப் தேவாலயம் அமைந்திருக்கும் வழியாகச் செல்கிறார். உள்ளுணர்வின் உந்துதலில் அச்சிறு ஆலயத்தின் உள்ளே நுழைந்ததைத் தனது மெய்த்தேடலின் ஆரம்பப் புள்ளியாகத் தன் சுயசரிதையில் குறிப்பிடுகிறார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!