கறுப்பு வண்ணத்தில் சாதாரண உடை, தனக்குப் பின்னால் இருக்கும் திரையில் கறுப்பு வண்ணக் காட்சி, அதில் ஒரு சில வார்த்தைகள் வெள்ளை நிறத்தில் அவ்வளவு தான். ஆனால் அரங்கில் இருக்கும் அனைவரும், அதை காணொலியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் கோடானுகோடி மக்களும் அவர் விற்கும் எந்தக் கணினியையும் எவ்வளவு விலை கொடுத்தாவது வாங்க இரவு பகலாக வரிசையில் நிற்பார்கள். அந்த மாதிரியான வசீகரப் பேச்சாளர் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆனால், நாமெல்லாம் அவரை மாதிரி கருப்புநிறக் காட்சிகளை மட்டும் வைத்துக் கேட்பவரின் கவனத்தை ஈர்க்க முடியாது. நமக்குத் தேவை ஜொலிக்கும் விளக்கக் காட்சிகள், அதைச் செய்யச் சிறந்த செயலி இன்றும் மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பில் வரும் மைக்ரோசாப்ட் பவர்பாயிண்ட் தான்.
இதைப் படித்தீர்களா?
பாகம் 2 51. ஆயுதம் இருள் முற்றிலும் விலகியிருக்கவில்லை. இரவெல்லாம் நடந்த களைப்பில் சிறிது அமர்ந்து இளைப்பாறலாம் என்று தோன்றினாலும், உடனே வேண்டாம்...
51. பாமரரும் மற்றவரும் காந்தியின் சென்னை வருகையைப்பற்றிப் பல இதழ்களும் செய்தித்தாள்களும் கட்டுரைகளை வெளியிட்டிருந்தன. அவற்றில் காந்தியின்...
Add Comment