Home » பனிப் புயல் – 20
தொடர்கள் பனிப் புயல்

பனிப் புயல் – 20

20 – சிலுவை ஏற்படுத்திய பிணைப்பு

தீவிரவாதம் என்ற பொது எதிரி, கிழக்கையும் மேற்கையும் ஒன்று சேர்த்தது. அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கும், ரஷ்யாவின் செச்சனியப் போர்களுக்கும் பின்னணி ஒன்றே. ‘சர்வதேச அளவில் தீவிரவாதத்தை ஒழிக்கும் கடமையை புதின் வெகு சிறப்பாக ஆற்றி வருகிறார்’ என பிரிட்டன் பிரதமர் டோனி பிளேர் பாராட்டினார்.

அமெரிக்க ரஷ்ய நாடுகளிடையே பரஸ்பரம் நம்பிக்கை உருவாகும் அவசியம் ஏற்பட்டது. அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும், அதிபர் புதினும் அடுத்த எட்டு வருடங்கள் பதவியில் நீடிக்க வாய்ப்பிருந்தது. அவர்களது முதல் சந்திப்பே ஒன்றரை மணிநேரத்துக்கும் மேலாக நீடித்தது. அப்போது புதின் கழுத்தில் தொங்கிய சிலுவையைக் குறித்து புஷ் கேள்வி எழுப்பினார்.

அவரது தாயார் அவரை ஞானஸ்நானம் பெறச்செய்ததைக் கூறினார் புதின். ஸ்டாலின் ஆட்சியின்போது கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த அவரது தந்தையிடமிருந்து அது மறைக்கப்பட்டது என்றார். ஒருமுறை அவரது டாச்சா முழுவதும் தீக்கிரையானபோதும் இந்த அதிசய சிலுவை மட்டும் சேதமடையவில்லை. அப்போதிருந்து புதின் சிலுவையை எப்போதும் கழுத்தில் அணிந்திருப்பதாகச் சொன்னார். தனக்கெனவே விபத்தில் அது அழியாமல் இருந்ததாக உணர்ந்ததாகவும் சொன்னார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!