22 – கார் ஓட்டும் சாகசக்காரன்
செப்டம்பர் – 1970.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகம்.
பதினெட்டாம் நூற்றாண்டின் பிரம்மாண்டக் கட்டடங்களுள் ஒன்று அந்தப் பல்கலைக்கழகம். அதன் சட்டக்கல்லூரி வளாகத்தின் புல்வெளியில் மர பெஞ்சுகள் போடப்பட்டிருக்கும். அதில் அமர்ந்து நீவா நதியின் அழகை ரசித்தார் வலோத்யா. எலிகள் நிறைந்த குடியிருப்பில் வளர்ந்தவருக்கு இது புதியதொரு அனுபவமாக இருந்தது.
பெரும்பாலான மாணவர்கள் பெரிய அதிகாரிகளின் பிள்ளைகளாக இருந்தார்கள். தொழிலாளர் குடும்பத்திலிருந்து வந்திருந்தவர்கள், ராணுவத்தில் பணியாற்றிய பிறகு கல்லூரியில் சேர்ந்திருந்தார்கள். வலோத்யாவைப் போலப் பள்ளியிலிருந்து சேர்ந்திருந்தவர்கள் மிகச் சிலரே. ஜூடோவில் ஆர்வமுள்ள இல்ஹாம் ரஹீமோவ், விக்டர் கமாரின் போன்றவர்களுடன் நிக்கோலாய் எகோரவ், அலெக்சாண்டர் பேஸ்ட்ரீகின் என வலோத்யாவுக்கு ஒரு குறுகிய நட்பு வட்டாரம் உருவானது.















Add Comment