Home » பனிப் புயல் – 32
தொடர்கள் பனிப் புயல்

பனிப் புயல் – 32

32 – நிர்ணயிக்கப்பட்ட இலக்கு

10-பிப்ரவரி-2007
ம்யூனிக் பாதுகாப்பு மாநாடு,
ஜெர்மனி.

சர்வதேசப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் குறித்து விவாதிக்க ஒவ்வொரு வருடமும் கூடும் மாநாடு அது. நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து அரசியல் தலைவர்களும், ராணுவத் தளபதிகளும், துறைசார் வல்லுநர்களும் கூடியிருந்தார்கள். முதல்முறையாக ரஷ்யத் தரப்பிலிருந்து ஒருவர் பேச அழைக்கப்பட்டிருந்தார். அதிபர் புதின் தனது உரையை இவ்வாறு தொடங்கினார்.

‘காதுகளுக்கு இனிமையாகவும், அளவுகடந்த மரியாதையுடனும் கூடிய ஒன்றுக்கும் உதவாத சொற்பொழிவை நான் ஆற்றப்போவதில்லை. சர்வதேசப் பாதுகாப்பு குறித்து என் மனதில் இருப்பதைப் பேச அனுமதி அளிப்பீர்கள் என்று நினைக்கிறேன்’ என்றார்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அப்பட்டமாகப் போட்டுடைத்தார் புதின். ‘அமெரிக்காவின் தலைமையில் மேற்குலகம் தொடர்ந்து ஒருதலைப்பட்சமாக முடிவுகளை எடுத்து வருகிறது. இந்த ஒற்றை தலைமைக்கும் ஜனநாயகத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஜார், கம்யூனிச ஆட்சிகளுக்குப் பிறகு ரஷ்யாவுக்கு ஜனநாயகத்தைக் கற்றுத்தருபவர்களே அதைக் கடைப்பிடிக்காதது வேடிக்கையாக உள்ளது.’

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!