Home » பிரஹஸ்தா எனும் புதிய போர்வீரன்
இந்தியா

பிரஹஸ்தா எனும் புதிய போர்வீரன்

பிரஹஸ்தன் என்பவன் ஒரு ராமாயணக் கதாபாத்திரம். ராவண சேனையின் தலைமைப் போர் வீரன். ஒரு வகையில் ராவணனுக்கு மாமன் முறை. ராட்சச வீரர்களிலேயே மிகவும் வலுவான பாத்திரமாகப் படைக்கப்பட்டவன். மிகத்தேர்ந்த போர்த்தந்திரங்களும், வலுவும், திடமும் கொண்டு ராவணனின் படைகளை முன்னிறுத்தி நடத்திச் சென்று மூன்று உலகங்களையும் அவனுக்கு வென்று கொடுத்தவன் என்பது அவனது கதாபாத்திரப் பெருமை. இப்போது அவன் பெயரைக் கொண்டு ஒரு செய்யறிவு ரோபோட்டை உருவாக்கியிருக்கிறது தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஜென் டெக்னாலஜிஸ் நிறுவனம்.

பாதுகாப்புத் துறைக்கான மூலப்பொருள்கள், கணினி நுட்பங்கள், போர்த் தளவாடங்கள் போன்றவற்றை உள்நாட்டிலேயே தயாரிக்கும் மேக் இன் இண்டியா (Make in India) திட்டத்தை மத்திய அரசு மிகத்தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. இதனால் 2023-24-ஆம் நிதியாண்டில் இந்தியாவில் பாதுகாப்புத் துறை சம்பந்தப்பட்ட பொருட்களின் உற்பத்தி 1.27 லட்சம் கோடி ரூபாய் என்ற உச்சத்தை எட்டியுள்ளது. இதன் அடிப்படையில் இந்தியாவிலேயே இயங்கும் வன்கணினித் தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவற்றிலும் நவீனப் பாதுகாப்புத் தளவாடங்களை உருவாக்கும் பொறுப்பினைக் கொடுத்துள்ளது.

ஜென் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஏற்கனவே ட்ரோன்களை எதிர்த்துச் செயல்படும் இயந்திர முறைமைகள் (Anti Drone Technology) மற்றும் டிஃபன்ஸ் சொல்யூஷன் (Defence Solution) ஆகியவற்றின் அடிப்படையில் பாதுகாப்புத் துறை சம்பந்தப்பட்ட பொருட்களை அறிமுகம் செய்துள்ளது. அந்த வரிசையில் இப்போது இந்நிறுவனம் உருவாக்கியுள்ள, இந்த நான்கு கால்கள் கொண்ட நவீன ரோபோ அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!