Home » ப்ரோட்டீன் தோசையும் பூச்சிக்கொல்லி எச்சமும்
ஆரோக்கியம்

ப்ரோட்டீன் தோசையும் பூச்சிக்கொல்லி எச்சமும்

உடலைக் கட்டுக்கோப்பாக வைக்கவும் எடையைக் குறைக்கவும் நம் உடலுக்குப் புரதச்சத்து தேவைப்படுகிறது. ப்ரோட்டீன் சப்ளிமெண்ட் எனப்படும் ப்ரோட்டீன் பவுடர், நம் உடலின் ப்ரோட்டீன் போதாமையைச் சரிக்கட்டப் பயன்படுத்தப்படுகிறது. சமீபத்திய ஆய்வு ஒன்று, இந்தியாவில் தயாரிக்கப்படும் ப்ரோட்டீன் பவுடர்களில், 70 சதவீதம் பிராண்டுகளில் ப்ரோட்டீனின் அளவு பிழையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது என்கிறது. மேலும் அவற்றில் எட்டுச் சதவீதம் பூச்சிக்கொல்லி எச்சம் இருப்பதாகவும் இந்த ஆய்வு சொல்கிறது. Medicine என்கிற மதிப்பாய்வு இதழில் இந்த ஆராய்ச்சி முடிவுகள் சென்ற ஆண்டு வெளியாகின. ப்ரோட்டீன் பவுடரின் உண்மையான நோக்கம் என்ன? அதைத் தனியாக எடுத்துக் கொள்வது சரிதானா என்பதைச் சற்று விளக்கமாகப் பார்க்கலாம்.

உயிர் வாழ்வதற்கு நம் உடலுக்கு ஐந்து விதமான சத்துக்கள் தேவைப்படுகின்றன. கார்போஹைடிரேட் எனப்படும் மாவுச்சத்து, கொழுப்பு, ப்ரோட்டீன், மற்றும் விடமின்ஸ் மினெரல்ஸ் எனப்படும் நுண் ஊட்டச்சத்துக்கள். இவற்றில் எடையைக் குறைப்பதற்கும் உடலைக் கட்டுக்கோப்பாக வைப்பதற்கும் புரதச்சத்து எனப்படும் ப்ரோட்டீன் தேவைப்படுகிறது. கோவிட் பெரும் தொற்று காலத்துக்குப் பிறகு மக்கள் தங்கள் உடல் நலத்தில் கூடுதல் அக்கறை செலுத்த தொடங்கினர். புரதச் சத்தின் தேவை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே பரவ ஆரம்பித்தது. திரைப்பிரபலங்களும், சோசியல் மீடியா செல்வாக்காளர்களும் அதை ஊக்குவித்தனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!